உன்னை எனக்குப் பிடிக்கல.. கார்த்திக், ரேவதி போட்ட டிராமா.. கார்த்திகை தீபம்!

சென்னை: ரேவதி கார்த்தியைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று வலுக்கட்டாயமாக சொன்னிய நிலையில், சாமுண்டீஸ்வரி ரேவதியிடம் உன் விருப்பப்படியே கார்த்திக்கை திருமணம் செய்து வைப்பதாக சொல்கிறார். இதையடுத்து, கார்த்திக்கிற்கு ஃபோன் செய்து ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என சொல்ல, கார்த்திக், சாமுண்டீஸ்வரி சொன்ன இடத்திற்கு வருகிறார். அப்போது சாமுண்டீஸ்வரி, எப்படியோ என் மகள் ரேவதியோட மனசை மாத்தி அவளை காதலிக்க வெச்சிட்ட, இப்போ அவ, உன்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று அடம் பிடிக்கிறாள். நானும் உன் இஷ்டப்பட கல்யாணம் பண்ணிவைக்கிறேன். அதற்கு பதிலா நீ ஒரு விஷயம் எனக்கு செய்யணும், நீ ரேவதிகிட்ட உன்னை நான் லவ் பண்ணல, உன்னை கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என நினைக்கவில்லை என்று சொல்ல வேண்டும் என சொல்கிறார்.

கார்த்திகை தீபம்: இதையடுத்து இன்றைய எபிசோடில், வீட்டுக்கு வந்த சாமுண்டீஸ்வரி ரேவதியை சந்தித்து நீ உன் மாமாவை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுற.. ஆனா, கார்த்திக் விருப்பமில்லைன்னு சொல்வதாக சொல்ல அதைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.ரேவதி அவர் அப்படி சொன்னா நீங்க உங்க கௌரவத்தை விட்டுட்டு போய் பேச வேண்டாம் என சொல்கிறார். இதைக்கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சியும் குழப்பமும் அடைகின்றனர்.இந்த நேரத்தில், வீட்டுக்கு வரும் கார்த்தி ரேவதியிடம் நான் உன்னை காதலிக்கவில்லை, திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என சொல்கிறார். இதைக்கேட்டு ராஜராஜன், என்ன மாப்பிள்ளை சொல்றீங்க, உங்களையும் ஈஸ்வரி மாறிவிட்டாளா என்று சொல்ல கார்த்திக் இல்லை மாமா இது சரிவராது என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

zee tamil Karthigai Deepam Serial

மாமாவை பத்தி பேசாதே: கார்த்திக் வீட்டை விட்டு கிளம்பியதும் ரேவதி, சரி விடுங்கம்மா.. இனிமே இத பத்தி பேச வேண்டாம் என சொல்கிறாள். உடனே ரோகினி, ரேவதியிடம் ஏன் கார்த்திக் இப்படி சொன்னார் என்று தெரியவில்லை. அவருக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும் என்கிறாள். உடனே ரேவதி, நீயும் என்ன மாதிரி தான் அக்கா அவரை தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்க, இதுக்கு மேல கார்த்திக் மாமா பத்தி என்கிட்ட எதையும் பேசாதே, அவரை பற்றி பேசினாலே எனக்கு கோவம் கோவமா வருகிறது என்கிறாள். இதை ஒட்டுக்கேட்டுக்கொண்டு இருக்கும் சாமுண்டீஸ்வரி, உன் வாயாலையே கார்த்திக்கை பிடிக்கவில்லை என்று சொல்லவெச்சிட்டேன், இதையே காரணமா வெச்சி உங்க ரெண்டு பேரையும் நிரந்தரமா பிரிந்து விடுகிறேன் என்கிறாள். இதைத்தொடர்ந்து, ரேவதி கார்த்திக்கு ஃபோன் செய்து, நீங்க சொன்ன மாதிரி பண்ணியாச்சு என பேசி சந்தோஷப்பட்டுக் கொள்கின்றனர். அதன் பிறகு சந்திரகலா சிவனாண்டியை சந்தித்து நடந்த விஷயத்தை சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X