அந்த மச்சம் விஷயம் அவளுக்கு எப்படித் தெரியும்? ராஜராஜனை நிற்க வைத்து அசிங்கப்படுத்திய சாமுண்டீஸ்வரி!

சென்னை: சிவனாண்டி கோவிலில் நடந்த அனைத்துயும் சொல்ல சந்திரகலா சந்தோஷப்படுகிறாள். மேலும், இந்த விஷயத்தை சாமுண்டீஸ்வரியிடமும் சொல்கிறாள். ஆனால், சாமுண்டீஸ்வரி நம்ப மறுக்க, அக்கா அந்த பெண் எல்லாத்தையும் ஆதாரத்தோடத்தான் சொல்லி இருக்கா, வீட்டில் இருந்த உன்னோட நகை எப்படி அந்த பெண்ணுக்கிட்ட போச்சு, அதை பார்த்த ரோகிணி அது உன் நகை தான் என்று சொல்லி இருக்கா என்கிறாள். அதுமட்டும் இல்ல அக்கா, மாமா தொடையில் ஒரு மச்சம் இருக்காம் அதையும் சொல்லி இருக்கா என்று சொன்னதும், சாமுண்டீஸ்வரி இடித்து போகிறாள். அப்போது, சந்திரகலா பாத்தியா அக்கா, மாமா உனக்காக அந்த குடும்பத்தை விட்டுவிட்டு வந்தேனு சொல்லிவிட்டு இப்படி உனக்கே துரோகத்தை செய்து இருக்கிறார் என்று சொல்ல, இதைக்கேட்டு சாமுண்டீஸ்வரி கண்கலங்குகிறாள்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், கார்த்திக் உண்மையை நிரூபிப்பதாக சொல்லி ஒரு நாள் அவகாசம் கேட்கிறார். இதற்கு ஊர் மக்களும் அனுமதி கொடுக்கின்றனர். அதைத்தொடர்ந்து ராஜராஜன் வீட்டுக்கு வர சாமுண்டீஸ்வரி, அவரை வாசலிலேயே நிற்க வைத்து உங்க மேல நான் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தேன் ஆனா நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கல, ரேவதிக்கு கல்யாண விஷயத்தில் இந்த வீடியோ ரகளமா இருந்துச்சு ஆனால், உங்களுக்கு மட்டும் ஒரு பொம்பளை தேவப்பட்டுச்சா என்று அவமானப்படுத்தும் படி பேசுகிறார்.

zee tamil Karthigai Deepam Serial
Photo Credit:

யார் அந்த பொம்பல: இந்த ஊர்க்காரர்கள் முன்னாடி என்னை தலைகுனிய வெச்சிட்டீங்களே என வேதனையில் பேசுகிறாள். அப்போது ராஜராஜன், என்னையே சந்தேகப்படுறியா என்று கேட்கிறார். உடனே சாமுண்டீஸ்வரி, இந்த பொம்பளை நகை காட்டியதால் மட்டும் தான் சந்தேகப்படல, நம்ம இரண்டு பேருக்கு மட்டும் தெரிந்த அந்த மச்சம் விஷயம் என்னடி அந்த பொம்பளைக்கு தெரிந்தது என தொடர்ந்து சாமுண்டீஸ்வரி கோபத்தை கொட்ட ஒரு கட்டத்தில் மாப்பிள்ளை கார்த்திக் என் மேல தப்பு இல்ல என்பதை நிரூபிப்பார் என சவால் விடுகிறார். இப்படி இவர்கள் இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டு இருக்கும் போது, சந்திரகலாவுக்கு ராஜராஜன் மீது பழி சுமத்திய பார்வதி இடமிருந்து ஃபோன் கால் வருகிறது. அடுத்து 48 மணி நேரத்தில் நான் துபாய் போய்விடுவேன், பஞ்சாயத்தில் என்ன நடந்தாலும் எனக்கு கவலை இல்லை என சொல்கிறாள். இப்படி இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருப்பதை ரேவதி ஒட்டு கேட்டு விடுகிறாள்.

சந்திரகலா தான் காரணம்: மறுபக்கம் கார்த்தியும் மயில்வாகனமும் அந்த பெண்ணின் ஊருக்கு சென்று விசாரிக்க அவளது கணவர் கணேசனை பார்த்து விசாரிக்கின்றனர். ஆனால், கணேசன் பார்வதியை பிரிந்து வாழ்வதாகவும் பணத்திற்காக பார்வதி எதையும் செய்வாள் என்ற விஷயத்தையும் சொல்கிறான். மிகப்பெரிய தொகையை வாங்கிட்டு தான் பார்வதி இப்படி ஒரு பழியை சுமத்தி இருப்பார் என்கிறார். அதை ஆதாரத்தோடு நிரூபிக்கணும் என மூவரும் முடிவு எடுக்கின்றனர். இந்த நேரத்தில் ரேவதி கார்த்திக்கு போன் செய்து, மாமா நாம சித்தி மீது சந்தேகப்பட்டது சரி தான், அவங்க தான் இதற்கு காரணம், சித்தி அந்த பெண்ணிடம் பேசினாங்க, இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்த பெண் பார்வாதி துபாய் போகப்போகிறாள் என்ற விஷயத்தை சொல்கிறாள்.

அவமானப்படுத்தும் பெண்கள்: மனவேதனையில் இருக்கும் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வர சிவனாண்டி ஏற்பாடு செய்த பெண்கள் சாமுண்டீஸ்வரி அவமானப்படுத்தி பேசுகின்றனர். இதனால், கோவத்தோடு வீட்டுக்கு வரும் சாமுண்டீஸ்வரி, ராஜனிடம் என்னால் வெளியே தலை காட்ட முடியல என ஆவேசப்படுகிறாள். இதனால் ராஜராஜன் உடைந்து போக, அவரது மூன்று மகள்களும் உங்க மேல எந்த தப்பும் இல்லை அப்பா, நிச்சயமா கார்த்திக் அதை நிரூபிப்பார் என ஆறுதல் சொல்கிறார்கள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X