துபாய் ஆசையை வச்சே தூக்கிய கார்த்தி.. பஞ்சாயத்தில் பல்பு வாங்கிய வில்லி.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் பார்வதி என்ற பெண் ராஜராஜன் மீது பழிபோட்ட நிலையில், சாமுண்டீஸ்வரியால் உடைந்து போகிறாள். அதே நேரம் இதற்கு எல்லாம் காரணம் சந்திரகலா தான் என்றும், அந்த பெண் பார்வதி துபாய்க்கு செல்லு விஷயத்தையும் ரேவதி, கார்த்தியிடம் சொல்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், கார்த்திக், மயில்வாகனம் இருவரும் சேர்த்து ஒரு திட்டத்தை போடுகின்றனர். அந்த திட்டத்தின் படி, மயில்வாகனம் மாறுவேடத்தில் பார்வதியை சந்திக்கிறார். அவனிடம் பெட்டி நிறைய பணம் இருப்பதை பார்த்து பார்வதி வாய் பிளக்கிறாள். நாளைக்கு துபாய் சொல்ல இருப்பதாக சொல்ல பார்வதி நானும் துபாய்க்கு செல்கிறேன் என்று சொல்கிறாள். அப்போது மயில் வாகனம் உன்னை எனக்கு ரொம்பபிடித்து இருக்கு, அங்கு போய் நாம ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்க்கையை ஆரம்பிக்கலாமா என்று சொல்ல,பார்வதி பணத்துக்கு ஆசைப்பட்டு சம்மதம் செல்கிறாள்.

zee tamil Karthigai Deepam Serial
Photo Credit:

கலசத்தில் ஃபோன்: பிறகு தனியாக வந்த மயில்வாகனம் கார்த்திக்கு போன் செய்து நடந்து விஷயத்தை சொல்கிறான். அடுத்த நாள் பஞ்சாயத்து கூட கார்த்திக், பார்வதிக்கு இதே வேலை தான், போன மாசம் கூட ஒருவர் மீது பழிபோட்டு அவரிடம் இருந்து பணம் வாங்கி இருக்காங்க அதற்கான ஆதாரம் இருப்பதாக சொல்கிறார். இதைக்கேட்ட பார்வதி அது பொய் என்று சொல்ல, இது உண்மை என்று நிரூபிக்க வேண்டும் என்றால், இந்த கலசத்தை தலையில் வைத்து கோவிலை சுற்றி வர வேண்டும், நீங்க நல்லபடியா சுற்றி வந்தா நீங்க சொல்வது உண்மை என்று சொல்கிறார். இதையடுத்து, பார்வதி கோவிலை சுற்றி வரும் போது முத்துவேலு போன் செய்து கார்த்திக் ரொம்ப ஏடாகூடமான ஆளு.. பார்த்து நடந்துக்கோ மாட்டிக்காதே என சொல்கிறார்.

உண்மையை சொன்ன பார்வதி: இதையடுத்து பார்வதி கோவிலை சுற்றி வந்து நல்லபடியாக சுற்றி முடித்துவிட்டேன், எனக்கு எதுவும் ஆகவில்லை நான் பொய் சொல்லவில்லை என்று சொல்கிறார். இந்த நேரம், கார்த்திக் கலசத்திற்குள் இருந்த கார்த்திக் போனை எடுக்க முத்துவேலுடன் பார்வதி பேசிய ஆடியோ அனைவருக்கும் போட்டு காட்டுகிறார். இதையெல்லாம், சேட் வேஷத்தில் இருக்கும் மயில்வாகனம் பார்த்து விட்டு என்ன பார்வதி இதெல்லாம் இப்படி இருந்தா உன்னை எப்படி துபாய்க்கு கூட்டிட்டு போறது என கேள்வி கேட்க பார்வதி உண்மையை சொல்கிறாள். அதன் பிறகு ராஜராஜன் மீது எந்த தவறும் இல்லை என்பது நிரூபணம் ஆகி அவர் கலச பூஜையில் பங்கேற்கிறார்.

மேலும் மாறுவேடத்தில் இருக்கும் மயில்வாகனம் பார்வதியிடம் நீ இன்னொருத்தவங்க கிட்டையும் உண்மையை சொல்ல வேண்டும் அப்போது தான் நாம சேர்த்து வாழ முடியும் என சொல்ல பணத்தாசையில் இருந்த பார்வதி, சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X