சாமுண்டீஸ்வரியின் தாலி தப்புமா? ராஜராஜனைக் கொல்ல வந்த போலி டாக்டர்.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் ராஜராஜனுக்கான ஆபரேஷன் ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், சந்திரகலாவின் திட்டத்தின் படி சிவனாண்டி ஆபரேஷன் செய்ய உள்ள டாக்டரின் வீட்டிற்குள் புகுந்து டாக்டர் மற்றும் அவரது குடும்பத்தினரை கட்டிப்போட்டு மிரட்டுகிறான். மேலும், சிவனாண்டி போலி டாக்டர் ஒருவரை ஏற்பாடு செய்து அவனிடம் ஹார்ட் அட்டாக் வர வைப்பதற்கான மருந்தை கொடுத்து ஹாஸ்பிடலுக்கு அனுப்புகின்றனர். சந்திரகலா கோவிலுக்கு போயிட்டு வந்ததாக சொல்லி விபூதியை கொடுக்க மயில்வாகனம் மேலும் சந்தேகம் கொள்கிறான்.
கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், போலி டாக்டர் மருத்துவமனைக்கு வர, அவரை பார்த்து பேசும் சந்திரகலா, அந்த கார்த்திக் ஹாஸ்பிடலில் இருந்தா நம்ம வேலை சரியா நடக்காது. அவனை மருந்து வாங்க வெளியே அனுப்பிவிடு என்கிறாள். சந்திரா சொன்னது போல, நர்சிடம் ஒரு சீட்டில் மருந்து வாங்கி வரும் சொல்லி அனுப்ப, கார்த்தி மயில்வாகனம் இருவரும் மருந்து வாங்க வெளியே செல்கின்றனர். இந்த நேரத்தில் போலி டாக்டர் ராஜராஜனுக்கு ஆப்ரேஷன் செய்ய ஆப்ரேஷன் தியேட்டருக்குள் செல்கிறார். அப்போது ரேவதி ஏற்கனவே அப்பாவை பரிசோதனை செய்த டாக்டர் கையில் டாட்டூ இருந்ததையும் இந்த டாக்டர் கையில் டாட்டூ இல்லை என்பதையும் கவனிக்கிறாள்.

ரேவதிக்கு வந்த சந்தேகம்: இதனால் சந்தேகம் அடைந்த ரேவதி கார்த்திக்கு தகவல் கொடுக்க அவன் டாக்டர் வீட்டு அருகே சென்று சோதனையிட டாக்டரின் டிரைவர் டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருப்பதை கவனிக்கின்றனர். பிறகு அவரிடம் விசாரிக்க டாக்டர் இன்னைக்கு ஹாஸ்பிடலுக்கு வரவே இல்லை என்று சொல்கிறார். இதைக்கேட்டு கார்த்தி ஷாக் ஆகின்றனர். பிறகு வீட்டுக்கு சென்று கதவைத் தட்ட யாரும் கதவை திறக்காத நிலையில் மேலும் சந்தேகம் அடைகின்றனர். பின்பக்கமாக சென்று பார்க்கும்போது கேஸில் வைத்திருந்த பால் சுண்டி கருகிக்கொண்டு தெரியவந்து வீட்டுக்குள் ஆள் இருப்பதை புரிந்து கொண்டு உள்ளே நுழைகின்றனர்.

பிறகு கைகள் கட்டப்பட்ட கிடக்கும் அவர்களை காப்பாற்றி ரேவதிக்கு வந்திருப்பது போல டாக்டர் என்ற விஷயத்தை தெரியப்படுத்துகின்றனர். இந்த விஷயம் அறிந்து சாமுண்டீஸ்வரி உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications