இவங்களை உயிரோடு விடக்கூடாது.. சிவனாண்டியை சுட்டுத்தள்ள துப்பாக்கியை தூக்கிய சாமுண்டீஸ்வரி!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில், ரேவதிக்கு வந்து இருக்கும் டாக்டர் மீது சந்தேகம் வர, அவள் கார்த்திக்கு தகவல் கொடுக்க அவன் டாக்டர் வீட்டு அருகே சென்று சோதனையிட டாக்டரின் டிரைவர் டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருப்பதை கவனிக்கின்றனர். பிறகு அவரிடம் விசாரிக்க டாக்டர் இன்னைக்கு ஹாஸ்பிடலுக்கு வரவே இல்லை என்று சொல்கிறார். இதைக்கேட்டு கார்த்தி ஷாக் ஆகின்றனர். பிறகு வீட்டுக்கு சென்று கதவைத் தட்ட யாரும் கதவை திறக்காத நிலையில் மேலும் சந்தேகம் அடைகின்றனர். பின்பக்கமாக சென்று பார்க்கும்போது கேஸில் வைத்திருந்த பால் சுண்டி கருகிக்கொண்டு தெரியவந்து வீட்டுக்குள் ஆள் இருப்பதை புரிந்து கொண்டு உள்ளே நுழைகின்றனர்.

பிறகு கைகள் கட்டப்பட்ட கிடக்கும் அவர்களை காப்பாற்ற அப்போது மருத்துவர் சிவனாண்டி தான் இதையெல்லாம் செய்தேன் என்றும், போலி மருத்துவரை வைத்து ராஜராஜனை கொல்ல திட்டம் போட்டு இருப்பதை சொல்கிறார். இந்த விஷயத்தை கார்த்திக் ரேவதிக்கு சொல்லி, வந்திருப்பது போலி டாக்டர் என்ற விஷயத்தை தெரியப்படுத்துகின்றனர். இந்த விஷயம் அறிந்து சாமுண்டீஸ்வரி உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

zee tamil Karthigai Deepam Serial
Photo Credit:

கார்த்திகை தீபம்: பிறகு ரேவதிக்கு ஆபரேஷன் தியேட்டரின் கதவை தட்டி ஆப்ரேஷனை நிறுத்த சொல்கிறாள். உள்ளே இருக்கும் நர்ஸ் கதவை தட்டுகிறார்கள் சார் என்று சொல்ல, அந்த போலி டாக்டர் உன்வேலையை மட்டும் பார் என்கிறார். இதனால், நர்ஸ்க்கு அந்த டாக்டர் மீது சந்தேகம் வருகிறது. மேலும், அவர் கையில் வைத்து இருக்கும் ஊசி பற்றி கேட்க, அதற்கும் போலி மருத்துவர் நர்சை திட்டுகிறார். இதனால், நர்சுக்கு வந்து இருப்பது போலி டாக்டர் என தெரியவர, அவள் மற்ற நர்ஸ்களிடம் இவர் டாக்டரே இல்லை என சொல்ல, மற்ற நர்ஸ்களும் அவரின் அவரை ஊசி போடவிடாமல் தடுக்கின்றனர். அதற்குள் கார்த்திக் அங்கு வந்துவிட, அந்த போலி மருத்துவரை கார்த்தி அடிக்க அவன், இது எல்லாத்திற்கும் காரணம் சிவனாண்டி என்கிறான். பின் அவனை காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார். அதன் பிறகு இதற்கு எல்லாம் காரணமான சிவனாண்டி, முத்துவேலை உயிரோடு விடக்கூடாது என முடிவு செய்யும் சாமுண்டீஸ்வரி அவர்களை சுட்டுத்தள்ள முடிவு செய்கிறாள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X