உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு.. சந்திரகலாவை தள்ளிவிட்டு ரேவதியிடம் உண்மையை உடைத்த ராதிகா!

சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில், ரேவதி ரோகிணியிடம் கார்த்தியிடம் தனது மனதில் இருக்கும் காதலை சொல்லப் போவதாக சொல்ல சந்திரகலா இதை ஒட்டு கேட்டு விடுகிறாள். பிறகு கார்த்திக் சாமுண்டீஸ்வரியை சந்திக்க வேண்டும் என கோவிலுக்கு வர சொல்ல சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலா என இருவரும் கிளம்பி கோவிலுக்கு வருகின்றனர். கலச பூஜைக்கு மாமாவை அனுப்பி வைக்க வேண்டும் என கார்த்திக் கோரிக்கை வைக்க சாமுண்டீஸ்வரி அவரை எதிர்த்து அனுப்பனும் என வாக்குவாதம் செய்கிறார்.

அதன்பின் ராதிகா என்ற பெண்மணி ஸ்கூட்டியில் வந்து கொண்டிருக்க அப்போது சிலர் வழிமறித்து காதலிக்க சொன்ன காதலிக்க மாட்டியா என ஆசிட் அடிக்க முயற்சி செய்ய அந்த வழியாக வந்த கார்த்திக் அந்த பெண்ணை காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து செல்கிறான். ரேவதிக்கு ட்ரீட்மெண்ட் பார்த்த டாக்டரின் மகள் தான் இந்த ராதிகா என்ற உண்மை தெரிய வருகிறது. பிறகு கார்த்திக் அங்கிருந்து கிளம்பியதும் டாக்டர் தனது மகள் ராதிகாவிடம் ரேவதிக்கு பழையவற்ற நினைவுபடுத்தினால் உயிருக்கு ஆபத்து வரும் என சந்திரகலா பொய் சொல்ல சொன்னதை சொல்கிறார்.

zee tamil Karthigai Deepam Serial
Photo Credit:

கார்த்திகை தீபம்: இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும், ராதிகா இது ரொம்ப தப்பா இருக்கு.. ரேவதிக்கு உண்மை தெரியனும் இதனால அவங்க வாழ்க்கை பாதிக்கப்படலாம் என்கிறார். ஆனால், டாக்டர் இந்த விஷயத்தை சொல்ல முடியாது. சந்திரகலா சாதாரண ஆள் கிடையாது அவளுக்கு ஆள் பலம், பண பலம் எல்லாம் இருக்க, அதுமட்டுமில்லாம நான் அவர்கிட்ட வேற நான் பணம் வாங்கி இருக்கேன் என்று விஷயத்தை சொல்கிறார். ஆனாலும் ராதிகா இந்த விஷயம் கார்த்திக்கும் ரேவதிக்கும் தெரிய வேண்டும் என்று உறுதியாக இருக்க டாக்டர் வேறு வழியின்றி ராதிகாவை ரூமுக்குள் அடைத்து வைக்கிறார்.

ரேவதிக்கு தெரியவந்த உண்மை: ஆனால் இங்கே அடைத்து வைக்கப்பட்ட ராதிகா ரூமில் இருந்து தப்பித்து சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு வருகிறாள். ராதிகா தப்பித்துவிட்டதால் பதறிப்போன டாக்டர், சந்திரகலாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல அவள் ஏற்கனவே டாக்டர் பேசிய வீடியோவை அனுப்பி உன் பொண்ணு மட்டும் இங்க வந்தா இந்த வீடியோ டாக்டர் கவுன்சிலுக்கு போகும், உன் வேலை பறி போய் விடும் என மிரட்டுகிறார். உடனே டாக்டர் அப்படி எதுவும் செய்துவிடாதீங்க, அதற்காகத்தான் நான் முன்கூட்டியே இந்த விஷயத்தை உங்களிடம் சொல்கிறேன், அவளை எப்படியாவது தடுத்துவிடுங்கள் என்கிறார். இதையடுத்து, சந்திரகலா, வாசலில் நின்று கொண்டு தடுக்கிறாள். ஆனால், ராதிகா, சந்திரகலாவை தள்ளிவிட்டு நேராக ரேவதியை சந்தித்து, உங்களுக்கு நடந்த விபத்தில் பல விஷயத்தை மறந்துவிட்டீங்க, உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு என்று சொல்ல ரேவதி அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X