ரகசிய கேமராவுடன் கார்த்திக்கின் பலே பிளான்.. சிக்குவானா மருது? கார்த்திகை தீபம்!
சென்னை: வீட்டிலேயே ரேவதி மருது திருமணத்தை செய்து வைத்துவிடலாம் என சாமுண்டீஸ்வரி ஒரு பிளான் போடுகிறாள். இதையடுத்து, இருவரும் மேடையில் வந்து அமர்கின்றனர். மருது கழுத்தில் தாலி கட்ட போகிற சமயத்தில் ரேவதி தடுத்து நிறுத்து நாளைக்கு கல்யாணம் தானே நடக்க போகுது, அப்படி இருக்கும் போது எதுக்கு இந்த சடங்கு என்று தடுக்கிறாள். ஒரு கட்டத்தில் சாமுண்டீஸ்வரியும் ரேவதி சொல்வதைக் கேட்டு இந்த சடங்கை நிறுத்தி விட மயில்வாகனம் ராஜராஜன் ஆகியோர் கார்த்திக்கு போன் செய்து நடந்த விஷயத்தை சொல்ல கார்த்திக் ரேவதி மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. அவ இப்பதான் என்னோட காதலை உணர ஆரம்பிச்சிருக்கா என்று சொல்கிறான்.
இதைத்தொடர்ந்து ரேவதி ஆஃபீஸ்க்கு வந்து கார்த்தியிடம் பத்திரிக்கை கொடுக்க அதான் உங்க அம்மா தாத்தாவிடம் கொடுத்தாங்களே என்று சொல்ல அது தாத்தாவுக்காக கொடுத்தது இது உங்களுக்காக நான் கொடுக்கிறது என்று சொல்லி கொடுக்கிறாள். பத்திரிக்கையை பிரித்து பார்க்க அதில் மாப்பிள்ளை பெயராக கார்த்தியின் பெயர் இருக்க கார்த்திக், ரேவதி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். மறுபக்கம் சந்திரகலா, சிவனாண்டிக்கு போன் செய்து கல்யாணத்தை ரேவதி நிறுத்திவிட்டதாக சொல்கிறார். இதைக்கேட்டு சிவனாண்டி ஏன் ரேவதி கல்யாணத்தை நிறுத்தினாள் என்று கேட்க, தெரியல அவ அக்காவை கூட்டிக்கிட்டு போய் ஏதோ பேசினா, வெளியில் வந்த அக்கா கல்யாணத்தை நிறுத்திவிட்டதாக சொல்கிறாள். மேலும், மருது ரேவதி கல்யாணம் முடியும் வரை, முருகன் கவனமாக பார்த்துக்கோங்க என்கிறாள்.

கார்த்திகை தீபம்: இதையடுத்து இன்றைய எபிசோடில், கார்த்திக் எப்படியாவது மருது தப்பானவன் என்பதை நிரூபிக்க வேண்டும் என முடிவெடுக்கிறான். அவனும் மயில் வாகனமும் சேர்ந்து ஆலோசனை செய்து அவனால் பாதிக்கப்பட்ட நிறைய பெண்கள் சந்தித்து மருது குறித்து நிரூபிக்க முடிவெடுக்கின்றனர். முதலில் ஒரு பெண்ணை சந்தித்து பேச அந்தப் பெண் உண்மையை சொல்ல சம்மதம் தெரிவிக்க அவரது அப்பா பிரச்சனை வேண்டாம், இப்படி நடந்துச்சுன்னு வெளியே தெரிஞ்சா அவமானம் என்று சொல்லி மறுத்து விடுகிறார்.
மருதுவை பிடிக்க திட்டம்: இப்படியாக பலரும் மருதுவுக்கு எதிராக பேச மறுத்துக் கொண்டே இருக்க மீனாட்சி என்ற பெண்மணி நான் கண்டிப்பா சாட்சி சொல்ல வரேன். அதனால எங்கப்பா ரொம்ப கடனாளி ஆகி இருக்காரு என்று சொல்கிறாள். பிறகு மருதுவை பேசி வர வைக்கின்றனர். மீனாட்சி கழுத்தில் இருக்கும் செயினில் கேமராவை செட் செய்து காத்துக் கொண்டு இருக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications