மாட்டிய மருது.. கைநழுவிய ஆதாரம்.. மீனாவைக் காப்பாற்ற கார்த்திக் எடுத்த முடிவு..கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில், கார்த்திக் எப்படியாவது மருது தப்பானவன் என்பதை நிரூபிக்க வேண்டும் என முடிவெடுக்கிறார். அவரும் மயில் வாகனமும் சேர்ந்து ஆலோசனை செய்து அவனால் பாதிக்கப்பட்ட நிறைய பெண்கள் சந்தித்து மருது குறித்து நிரூபிக்க முடிவெடுக்கின்றனர். முதலில் ஒரு பெண்ணை சந்தித்து பேச அந்தப் பெண் உண்மையை சொல்ல சம்மதம் தெரிவிக்க அவரது அப்பா பிரச்சனை வேண்டாம், இப்படி நடந்துச்சுன்னு வெளியே தெரிஞ்சா அவமானம் என்று சொல்லி மறுத்து விடுகிறார்.

இப்படியாக பலரும் மருதுவுக்கு எதிராக பேச மறுத்துக் கொண்டே இருக்க மீனா என்ற பெண்மணி நான் கண்டிப்பா சாட்சி சொல்ல வரேன். அவன் என் போட்டோவை மாஃபிங் செய்து நெட்டில் போட்டுவேன் என சொல்லி அப்பாவை மிரட்டி பணத்தைவாங்கி என் அப்பாவை கடனாளி ஆக்கிவிட்டார் என்று சொல்கிறாள்.
அவனை நிச்சயமாக நான் பிடித்து போலீசில் ஒப்படைக்க வேண்டும் என சொல்கிறாள். இதையடுத்து, மீனா, மருதுவை பேசி ஒரு இடத்திற்கு வைக்கின்றனர். இதனால், மீனா கழுத்தில் இருக்கும் செயினில் கேமராவை செட் செய்து காத்துக் கொண்டு இருக்கின்றனர். அதாவது, மருது மீனாவை சந்தித்து பேசி தனது முகத்தில் இருக்கும் மாஸ்கை எடுக்க அது மருந்து தான் என்பது வீடியோவில் பதிவாகிறது. அதன் பிறகு மீனா கார்த்தியை சந்தித்து அந்த வீடியோ ஆதாரத்தை கொடுக்கிறாள்.
கார்த்திகை தீபம்: கார்த்திக் இதை போலீசில் ஒப்படைக்க போகும் நேரத்தில் இந்த விஷயம் தெரிந்த மருது மீனாவை கடத்தி வீடியோ ஆதாரத்தை கொடுக்கலனா மீனாவை கொன்னுடுவேன் என மிரட்டுகிறான். இதனால் கார்த்திக் வீடியோ ஆதாரத்தை மருதுவிடம் கொடுத்து மீனாவை காப்பாற்றுகிறான். மறுபக்கம் ரேவதிக்கு தாலி செய்யும் வேலைகள் நடக்கிறது. சாமுண்டீஸ்வரி எப்படியாவது இந்த கல்யாணத்தை நல்லபடியாக நடத்தி முடித்து அந்த கார்த்தியை தோற்கடிக்க வேண்டும் என திட்டமிடுகிறாள். அதேபோல் சந்திரகலா இந்த கல்யாணம் நடந்தால் ரேவதி வாழ்க்கை நாசமாகும். குற்ற உணர்ச்சியால் சாமுண்டீஸ்வரி தோற்றுப் போவால், அதன்பின் சிவனாண்டியுடன் சேர்ந்து இந்த வீட்டை ஆளலாம் என திட்டமிடுகிறாள்.

கார்த்தியை தேடும் ரேவதி: பிறகு ரோகினி ரேவதியிடம் உனக்கு கார்த்தி மேல காதல் இருக்கு அதை ஏன் வெளியே சொல்ல மாட்டுற என்று கேட்க கார்த்தி கண்டிப்பா இந்த கல்யாணத்தை நிறுத்துவாரு, அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு என சொல்கிறாள். அடுத்து ரேவதியுடன் எல்லோரும் மண்டபத்திற்கு வருகை தர ரேவதிக்கு பார்க்கும் இடம் எல்லாம் கார்த்தி நிற்பது போல தோன்றுகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications