ரேவதி என் பொண்டாட்டி.. சாமுண்டீஸ்வரிக்கு சவால் விட்ட கார்த்திக்.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திக் திருமணத்திற்கு வராததால், பதற்றத்தில் இருக்கும் ரேவதி, அக்கா ரோகிணியிடம் சென்று விசாரிக்க அவளும் இன்னும் வரவில்லை என்று சொல்கிறாள். இதனால் ரேவதி கார்த்திக்கு போன் செய்து எங்க இருக்கீங்க என்று கேட்க, அவன் மருதுவால் பாதிக்கப்பட்ட பெண்ணை பாப்பதற்காக ஹாஸ்பிடலில் இருப்பதால், ஹாஸ்பிடலில் இருப்பதாக சொல்கிறான். மேலும் இப்போதைக்கு என்னால் வர முடியாது எனவும் சொல்கிறான். இதனால் ரேவதி அவனை கையோடு அழைத்து வர இங்கிருந்து கிளம்பி செல்கிறாள். ரேவதி கார்த்தியை மண்டபத்திற்கு அழைத்து வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பதை பாக்கலாம்.
அதாவது, மண்டபத்திற்கு வந்த கார்த்திகயை பார்த்த சாமுண்டீஸ்வரி, எங்கே நீ வராம போய்டுவியோனு நினைச்சேன். ஆனால், உன்னை ரேவதியை கூட்டிக்கிட்டு வந்துட்டா. நீ இந்த கல்யாணத்தை உன் கண்ணால பாக்கணும் என்கிறார். உடனே கார்த்திக், அத்தை இந்த கல்யாணத்திற்கான இவ்வளவு செலவு செய்து இருக்கீங்க, உங்க ஆசைக்காகத்தான் இத்தனை நாளா நான் அமைதியா இருந்தேன். இந்த கல்யாணத்தில் ரேவதி மணமேடை ஏற மாட்டா, அப்படியே அவ மண மேடை ஏறினாலும், அவள் கழுத்தில் நான் தான் தாலி கட்டுவேன், ரேவதிக்கும் எனக்கும் தான் கல்யாணம் நடக்கும் என சவால் விடுகிறான். பிறகு சந்திரகலாவை பார்த்து என்ன சின்ன மாமியாரை சிவனாண்டி சௌக்கியம் தானே என வம்பு இழுக்கிறான்.

கார்த்திகை தீபம்: அதைத்தொடர்ந்து மீனாவும் அவளது அப்பாவும் மண்டபத்திற்கு வந்து சாமுண்டீஸ்வரியை சந்தித்து மருது கெட்டவன் அவனால் பல பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையை சொல்கிறார். ஆனால், சாமுண்டீஸ்வரி ஆதாரமில்லாமல் எதையும் நம்ப முடியாது என மறுக்கிறாள். அப்போது தான் ஆதாரம் இருக்கு இந்த மருதுவால் இத்தனை நாளா கோமாவில் இருந்த மீனாட்சி இப்போ தான் நினைவு திரும்பி இருக்கு அவ வந்து உண்மையை சொல்லுவா என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகின்றனர். இந்த விஷயம் தெரிந்து மருந்து என்ன ஆகுமோ என்ற பயத்தில் இருக்கிறான்
கார்த்தியின் பிளான்: மறுபக்கம், கார்த்திக் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து அவசரமாக பிரியா இருக்கும் மருத்துவமனைக்கு வர சொல்ல, அவர் வந்து என்ன கார்த்திக் ஏன் அவசரமா வர சொன்னீங்க என்று கேட்கிறார். அப்போது கார்த்திக் பிரியா, கோமாவில் இருந்து கண்விழித்து விட்டதாக மருதுவிற்கு தெரியப்படுத்திவிட்டேன். அவன் நிச்சயம் பிரியாவை கொல்வதற்காக வருவான். இதனால், நாம உடனடியாக பிரியாவை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய சொல்கிறான். இதையடுத்து ஹாஸ்பிடலுக்கு மருது மாஸ்க் அணிந்து பிரியாவைக் கொல்ல நுழைகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications