மருதுவின் மாஸ்டர் பிளான் சிக்கிய கார்த்தி.. கல்யாணத்திற்கு ரெடியான ரேவதி.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியல் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மருதுவை மடக்கி பிடிக்க மாஸ்டர் பிளான் போட்டார். நிச்சயம் மருது பிரியாவை கொல்வதற்காக வருவார். அவரை நாம் மடக்கி பிடித்துவிடலாம் என திட்டம் போடுகிறார். இதையடுத்து, ஹாஸ்பிடலில் இருக்கும் ப்ரியாவை கொள்வதற்காக முகமூடி அணிந்த நபர் உள்ளே நுழைந்து கத்தியால் குத்த முயற்சி செய்ய அவனை மறைந்து இருந்த கார்த்திக் பிடித்து முகமூடியை விலக்க அது மருது இல்லை என்பது தெரிய வருகிறது. பிடிபட்ட அந்த நபர் பணத்திற்காக தான் நான் இப்படி செய்ய வந்தேன் மற்றபடி எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்ல கார்த்திக் மருது மிஸ் ஆனதை நினைத்து வருத்தப்படுகிறார்.

கார்த்திகை தீபம்: இந்த விஷயத்தை கார்த்திக் மயில்வாகனத்திடம் சொல்ல, அய்யோ இந்த கல்யாணம் நடந்து விடுமே என பதறுகின்றனர். அதைத்தொடர்ந்து இங்கே ராஜராஜன் மகளிர் ஆணையத்திற்கு போன் செய்து என் மகள் ரேவதிக்கு விருப்பமில்லாமல் திருமணம் நடைபெறுவதாக சொல்ல போனில் பேசிய காயத்ரி தேவி போலீசுடன் திருமணத்தை நிறுத்த கிளம்பி வருகிறேன் என சொல்கிறார். 'மகளிர் ஆணைய தலைவர் காயத்ரி தேவி போலீஸ் படையுடன் மண்டபத்திற்கு வந்து, இந்த கல்யாணம் பொண்ணு விருப்பம் இல்லாம நடக்குது என்கின்றனர். இதனால், கல்யாணம் நடப்பதை அனுமதிக்க முடியாது என சொல்ல அனைவரும் ஷாக் ஆகின்றனர்.
கல்யாணத்திற்கு சம்மதம்: நான் கல்யாண பொண்ணிடம் விசாரிக்க வேண்டும் என்று சொல்ல, சாமுண்டீஸ்வரி நானே கூட்டிட்டு வரேன் என மேலே செல்கிறாள். ரேவதியை சந்தித்து சாமுண்டீஸ்வரி, இந்த கல்யாணம் மட்டும் நடக்கலனா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் என சொல்லி பயம் காட்டி கீழே அழைத்து வர ரேவதி, தனது விருப்பப்படி தான் இந்த கல்யாணம் நடக்கிறது. என்னை யாரும் கட்டாயப்படுத்த வில்லை என சொல்கிறாள். அதைக் கேட்டு ராஜராஜன், மயில்வாகனம் ஆகியோர் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications