கோமாவில் இருந்து கண்விழித்த பிரியா.. ரேவதி கல்யாணத்தில் நடக்கப்போவது என்ன? கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில், கார்த்திக் இதற்கு மேல் இந்த மண்டபத்தில் இருந்தால் கல்யாணம் நடக்காது என்பதை தெரிந்து கொண்ட மருது, சில ரௌடிகளை மண்டபத்திற்கு வர வைத்து ராஜராஜனிடம் வம்பு இழுத்து பிரச்சினை செய்ய வைக்கிறான். இதைப்பார்த்து ஆத்திரப்படும் கார்த்திக், இதை தடுத்து கேள்வி கேட்க இருவருக்கும் இடையே பிரச்சனை உருவாக மருது மற்றும் சாமுண்டீஸ்வரி ஆகியோர் போலீசுக்கு தகவல் கொடுக்க போலீசார் மண்டபத்திற்கு வந்து, கார்த்தியை கைது செய்து அழைத்துச் செல்கின்றனர்.

zee tamil Karthigai Deepam Serial
Photo Credit:

இந்த விஷயத்தை ராஜராஜன் ரேவதியிடம் சொல்ல, மாமா இப்போ இங்க வரணும் அவர் மட்டும் வரவில்லை என்றால், இந்த கல்யாணம் நடக்காது என சொல்கிறார். நானே அவரை போய் கூட்டிட்டு வரேன் என சத்தம் போடுகிறாள். ஒரு கட்டத்தில் கார்த்தியை வெளியே கொண்டு வருவதற்காக ரேவதி ஸ்டேஷனுக்கு கிளம்பி செல்கிறாள். ரேவதி ஸ்டேஷனுக்கு சென்று கார்த்திகை வெளியே எடுக்கிறாள். பிறகு கார்த்திகை மண்டபத்திற்கு அழைத்து வருகிறாள். இதைப் பார்த்து சந்திரகலா சாமுண்டீஸ்வரி ஆகியோர் ஷாக் ஆகின்றனர். மருதுவம் அடுத்து என்ன செய்வது என யோசிக்கிறான்.

zee tamil Karthigai Deepam Serial
Photo Credit:

கார்த்திகை தீபம்: பிறகு கார்த்திக் மயில்வாகனத்திடம் எப்படியாவது முருகனைக் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என சொல்கிறான். மறுபக்கம் ராஜராஜன் இந்த கல்யாணத்தை நிறுத்த மருதுவை கொல்வது தான் ஒரே வழி என முடிவெடுத்து கடைக்குச் சென்று கத்தியை வாங்குகிறார். அடுத்த நாள் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடக்க ஐயர் இருவருக்கும் முகூர்த்த புடவையை கொடுத்து மணமேடைக்கு வர சொல்கிறார். கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். பிறகு ரேவதி கடவுளிடம் எப்படியாவது இந்த கல்யாணம் நடக்கக்கூடாது, எனக்கும் கார்த்திக் மாமாவுக்கும் தான் கல்யாணம் நடக்க வேண்டும் என வேண்டுகிறாள். இந்த நிலையில் கோமாவில் இருந்த பிரியா கண்விழித்ததாக தகவல் கிடைக்கிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X