மண்டபத்தில் மருது செய்த கொடூரம்.. விபத்தில் சிக்கிய உயிருக்குபோராடும் முருகன்.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் சனிக்கிழமை எபிசோடில் பிரியா கோமாவில் கண்விழிக்கிறாள். என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியது தான் ரெட் தான். அவனால் பல பெண்களின் வாழ்க்கை நாசமாகி இருக்கு என்றும், அவனை பற்றி புகார் கொடுக்க சென்ற போது தான், அவன் காரை ஏற்றி என்னை இப்படி ஆக்கிவிட்டான் என்கிறாள். இதையடுத்து பிரியாவின் அம்மா, தனது போனில் இருந்த ரெட்டின் போட்டோவை காட்டி இவன் தான் நீ சொல்லும் ரெட்டா என்று கேட்க, ஆமாம் இவன் தான் அந்த பெருக்கி என்கிறாள்.

zee tamil Karthigai Deepam Serial
Photo Credit:

கார்த்திகை தீபம்: மேலும், இவனை சும்மா விடக்கூடாது, நீங்க கார்த்திக்கிடம் இந்த விஷயத்தை சொல்லி இங்கு வர சொல்லுங்க நான், அவருக்கு ஆதாரங்களை தருகிறேன் என்கிறாள். இதையடுத்து பிரியாவின் அம்மா, மண்டபத்தில் இருக்கும் கார்த்திகை பார்ப்பதற்காக வருகின்றனர்.மறுபக்கம் முருகன், சிவனாண்டியின் பிடியில் தான் இருக்க வேண்டும் என சந்தேகம் கொள்ளும் மயில்வாகனம் அவனை எந்த இடத்தில் வைத்து இருக்கிறார்கள் என்தை தெரிந்து கொள்ள ஒரு திட்டத்தை போடுகிறார். அதாவது, மயில் வாகனம் ஜூஸை சந்திரகலாவிடம் கொடுப்பது போல கொடுத்து அவர் மீது கொட்டி விட, அவள் ரெஸ்ட் ரூம் சென்ற நேரத்தில், சந்திரகலாவின் போனை எடுத்து சிவனாண்டிக்கு போன் செய்து சந்திரகலா குரலில் பேசுகிறார். சிவனாண்டியும் பேசுவது சந்திரகலா தான் என நினைத்து கொண்டு முருகனை அடைத்து வைத்து இருக்கும் இடத்தை சொல்லி விடுகிறார்.

zee tamil Karthigai Deepam Serial
Photo Credit:

நடக்கப்போவது என்ன: பிரியாவின் அம்மா மண்டபத்திற்கு வந்து கார்த்தி எங்கே என தேடிக்கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் மயில்வாகனம் வந்து கார்த்தியிடம், சகளை முருகனை சிவனாண்டி கோவில் பக்கத்தில் இருக்கும் குடோனில் தான் அடைத்து வைத்து இருப்பதாக சொல்கிறார். இதையடுத்து இருவரும் முருகனை தேடி அங்கு செல்கின்றனர். மறுபக்கம் மண்டபத்தில் பிரியாவின் அம்மாவை பார்த்துவிட்ட மருது, அவரை பெட் ஷீட்டால் முகத்தை மூடி சுவற்றில் இடித்து தாக்க அவர் மயங்கி சரிந்துவிடுகிறார். இதையடுத்து பிரியாவின் அம்மாவை ஒரு ரூமுக்குள் அடைத்து வைக்கிறான் மருது. மற்றொரு பக்கம் முருகன் சிவனாண்டி பிடியில் இருந்து தப்பி ஓடி வரும்போது ஒரு விபத்தில் சிக்கி கவலைக்கிடமான நிலையில் கார்த்திக் கண்ணில் படுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X