மருதுவை கொல்வதுதான் ஒரே வழி.. கையில் கத்தியுடன் ரூமுக்குள் நுழைந்த ராஜராஜன்.. கார்த்திகை தீபம்!
சென்னை: பிரியாவின் அம்மா மண்டபத்திற்கு வந்து கார்த்தி எங்கே என தேடிக்கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் மயில்வாகனம் வந்து கார்த்தியிடம், சகளை முருகனை சிவனாண்டி கோவில் பக்கத்தில் இருக்கும் குடோனில் அடைத்து வைத்து இருப்பதாக சொல்கிறார். இதையடுத்து இருவரும் முருகனை தேடி அங்கு செல்கின்றனர். மறுபக்கம் மண்டபத்தில் பிரியாவின் அம்மாவை பார்த்துவிட்ட மருது, அவரை பெட் ஷீட்டால் முகத்தை மூடி சுவற்றில் இடித்து தாக்க அவர் மயங்கி சரிந்துவிடுகிறார். இதையடுத்து பிரியாவின் அம்மாவை ஒரு ரூமுக்குள் அடைத்து வைக்கிறான் மருது.
மற்றொரு பக்கம் முருகன் சிவனாண்டி பிடியில் இருந்து தப்பி ஓடி வந்து கார்த்தியை சந்தித்து பேசிக்கொண்டு இருக்க, இதைப்பார்த்த சிவனாண்டி முருகனை ஒரு இரும்பு கம்பியால் அடித்து தாக்குகின்றனர். இதனால்,முருகன் ஆபத்தான நிலையில் இருக்க கார்த்திக் அவனை மருத்துவமனையில் சேர்க்கிறார்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், முருகனை பிரியா இருக்கும் அதே மருத்துவமனையில் சேர்க்கிறார். அப்போது தான், கோமாவில் இருந்த பிரியா கண் விழித்தது கார்த்திக்கிற்கு தெரியவருகிறது. இதையடுத்து, கார்த்திக் பிரியாவை சந்தித்து பேசுகிறான். அப்போது பிரியா, பல பெண்களின் வாழ்க்கையை கெடுத்தது அந்த ரெட் தான்,அவனை சும்மா விடக்கூடாது என்கிறார். இதனால், நான் அந்த கல்யாண மண்டபத்திற்கு வந்து இந்த கல்யாணத்தை நிறுத்துகிறேன் என்கிறார். இதையடுத்து, கார்த்திக் பிரியாவை ஆம்புலன்ஸ்சில் அழைத்துக் கொண்டு மண்டபத்திற்கு கிளம்புகிறான்.
மருதுவின் பிளான்: ஆனால், அந்த மருத்துவமனையின் வார்ட் பாய் மூலமாக, பிரியா கண்விழித்த விஷயம் மருதுக்கு தெரிய வர, அவன் கார்த்தியை மண்டபத்துக்கு வர விடாம தடுக்கிற வேலைய பாரு. அதுக்குள்ள எங்க கல்யாணம் முடிஞ்சிட்டா அதுக்கப்புறம் எதுவும் செய்ய முடியாது என சொல்கிறான். இதையடுத்து, மருது சொன்னது போல அந்த வார்ட் பாய், ஆம்புலன்ஸ் டிரைவரை அடித்து ஒரு இடத்தில் படுக்கவைத்துவிட்டு, ஆம்புலன்ஸ் டிரைவர் போல ஆம்புலன்சில் ஏறுகிறான்.

இந்த கல்யாணம் நடந்தே ஆகணும்: மறுபக்கம் திருமண மண்டபத்தில், சுவாதி சாமுண்டீஸ்வரியை சந்தித்து இந்த கல்யாணத்தில் ரேவதி அக்காவிற்கு விருப்பமே மில்லை, இதனால், இந்த கல்யாணத்தை நிறுத்திவிடுங்க என்று கேட்க சாமுண்டீஸ்வரி கோப்பட்டு சுவாதியை திட்டி, இது உனக்கு தேவையில்லாத வேலை, நான் உன்னோட அம்மா எனக்கு என்ன செய்ய வேண்டும் என தெரியும் என்கிறார். பிறகு ரேவதி அறைக்கு சென்று, இந்த கல்யாணம் நடக்கணும், அப்படி இந்த கல்யாணம் நடக்கவில்லை என்றால் அவ்வளவு தான் என மிரட்டுகிறாள்.
கையில் கத்தியுடன் ராஜராஜன்: இன்னொரு பக்கம் ராஜராஜன் இந்த கல்யாணத்தை இப்போது நிறுத்தவில்லை என்றால், இந்த கேடுகெட்ட மருது ரேவதி கழுத்தில் தாலியை கட்டிவிடுவான். இப்போ கார்த்திக் மாப்பிள்ளையும் இங்கே இல்லை, இதனால் என்ன ஆகுமோ என்ற பயத்தில் இருக்கும் ராஜராஜன், மருதுவை கொல்வது தான் ஒரே வழி என கையில் கத்தியுடன் மருது ரூமுக்குள் நுழைகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications