அய்யோ.. ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜராஜன்.. மணமடையில் ரேவதி, மருது.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், ராஜராஜன் இந்த கல்யாணத்தை இப்போது நிறுத்தவில்லை என்றால், இந்த கேடுகெட்ட மருது ரேவதி கழுத்தில் தாலியை கட்டிவிடுவான். இப்போ கார்த்திக் மாப்பிள்ளையும் இங்கே இல்லை, இதனால் என்ன ஆகுமோ என்ற பயத்தில் இருக்கும் ராஜராஜன், மருதுவை கொல்வது தான் ஒரே வழி என கையில் கத்தியுடன் மருது ரூமுக்குள் நுழைகிறான்.
ராஜராஜனை பார்த்த மருது, வாங்க மாமா, மணமேடைக்கு அழைத்து செல்ல வந்தீங்களா என்று சொன்னான். உடனே கோவப்பட்ட ராஜராஜன், யாருடா மாமா, உன்னை மாதிரி கெடு கெட்டவன் எல்லாம் என்னை மாமானு கூப்பிடக்கூடாது என்கிறார். உடனே மருது, மாமா கார்த்திக்கும் ரேவதிக்கும் கல்யாணம் ஆகவில்லை என்கிற ஆத்திரத்தில் பேசுறீங்களா என்று கேட்கிறான். அப்போது ராஜராஜன் டேய், கார்த்தியும் ரேவதியும் புருஷன் பொண்டாட்டி என்பது தெரிந்தும் நீ ரேவதியை கல்யாணம் பண்ணிக்க பாக்குறியே இது உனக்கே அசிங்கமா தெரியலையா என்று கேட்டு சண்டை போடுகிறான்.

கார்த்திகை தீபம்: இப்படி இருவருக்கும் இடையே சண்டை முற்றிவிட ராஜராஜன் தான் மறைத்துவைத்து இருந்த கத்தியை எடுத்து மருதுவை குத்தும் நேரத்தில், மருது அந்த கத்தியை வாங்கி அப்படியே ராஜராஜனை குத்தி விடுகிறான். இதனால், ராஜராஜன் அப்படியே சரிந்து விழுகிறார். இந்த நேரத்தில், சாமுண்டீஸ்வரி ரூமுக்கு வர இராஜராஜனின் மீது போர்வையை போற்றி கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கிறான். அடுத்ததாக சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலா மருதுவிற்கு மாலை போட்டு மாப்பிள்ளையாக மணமேடைக்கு அழைத்து வருகின்றனர்.
குடோனில் பிரியா: மறுபக்கம் ஆம்புலன்ஸ் வழி மாறி செல்வதை கவனித்த கார்த்திக், பிரியாவுக்கு கால் செய்ய போன் நாட் ரீச்சபிள் என வருகிறது. பிறகு உடன் இருக்கும் நர்ஸிற்கு ஃபோன் செய்ய இதோ தப்பான வழில கூட்டிட்டு போறாங்க என சந்தேகத்தை சொல்கிறாள். மேலும் தன்னிடம் பட்டன் போன் தான் இருக்கிறது அதனால் லொகேஷன் அனுப்ப முடியாது என சொல்ல கார்த்திக் இவர்களை இப்படி தேடி கண்டுபிடிப்பது என குழப்பம் அடைகிறான். ஒரு குடோனுக்குள் இவர்களை அடைக்க பிரியா கார்த்திக்கு குடோனில் இருக்கும் விஷயத்தை தெரியப்படுத்துகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications