ராஜராஜன் பிழைப்பாரா? கதி கலங்கி நிற்கும் சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் எபிசோடில், தாலி கட்டும் நேரத்திற்கு வந்த கார்த்திக் கல்யாணத்தை தடுத்து நிறுத்துகிறான். பின் ஆம்புலன்சில் இருந்து இறங்கும் பிரியா, இந்த மருது மோசமானவன், என்னை காதலச்சி ஏமாற்றிவிட்டேன், என்னுடன் நெருக்கமாக இருந்த போட்டோக்களை எல்லாம் நெட்டில் விட்டு பணத்தை சம்பாதித்தார். இவனை பற்றி புகார் கொடுக்க சென்ற என்னை காரை ஏற்றி கொல்லப்பார்த்தான் என சொல்கிறாள். பிரியா மட்டுமின்றி போலீஸ் மருதுவால் பாதிக்கப்பட்ட பெண்களை அங்கு அழைத்து வந்து அனைவரும் மருது மோசமானவன் என்ற உண்மையை சொல்கின்றனர். ஆனால், மருது இவங்க சொல்றதெல்லாம் பொய்யென சொல்கிறாள். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஆதாரத்துடன் உண்மையை சொல்ல சாமுண்டீஸ்வரி மருதுவை அடித்து, இந்த கல்யாணம் நடக்காது என சொல்கிறாள்.
கார்த்திகை தீபம்: இதைத்தொடர்ந்து அங்கு வந்த பெண்களுக்கு நன்றி சொல்லும் சாமுண்டீஸ்வரி, ரேவதியிடம் கையெடுத்து கும்பிட்டு என்னை மன்னித்துவிடு ரேவதி என்கிறாள். அதன் ரேவதி கார்த்திக்கிடம் சென்று ரொம்ப நன்றி மாமா, நீங்க மட்டும் சரியான நேரத்திற்கு வரவில்லை என்றால், அந்த மருது என் கழுத்தில் தாலி கட்டி இருப்பான் என்கிறாள். பிறகு மண்டபத்தை சுத்தம் செய்யும் போது, மருது அறையை சுத்தம் செய்த தொழிலாளி ஒருவர் கட்டில் கடியில் ராஜராஜன் குத்துப்பட்டு கிடப்பதை பார்த்து அலறி கத்துகிறார்.

கோவப்படும் ரேவதி: அதன் பின் அனைவரும் அதைப்பார்த்து பதறிப்போய், ராஜராஜனை ஹாஸ்பிடல் அட்மிட் செய்கின்றனர். ரேவதி உன்னால தான் அப்பாவுக்கு இந்த நிலைமை, இந்த வீட்டில் நீ எடுப்பது தான்முடிவு அதை மீறி யாராவது பேசுனா அவங்களை மிரட்டுவ, நீ அப்பா பேச்சை கேட்காததால் தான் அப்பாவிற்கு இந்த நிலைமை என சாமுண்டீஸ்வரியிடம் கோவப்படுகிறாள். அவளும் தன்னுடைய கணவரின் நிலைமையை பார்த்து கண்கலங்கி நிற்கிறாள்.
வேஷம் போடும் சந்திரா: இதைத்தொடர்ந்து கார்த்திக் பிரியாவை ஆஸ்பிட்டலில் அட்மிட் செய்து தனக்கு உதவியதற்கு நன்றி சொல்கிறாள். அதைத்தொடர்ந்து பிரியாவின் அம்மா சாமுண்டீஸ்வரி சந்தித்து மருது நல்லவன் இல்லை என்ற உண்மையை நான் ஏற்கனவே சந்திரகலாவை சந்தித்து சொன்னேன் ஆனா அவங்க ஏன் இந்த கல்யாணத்தை நிறுத்தல என்ற உண்மையை உடைக்கிறார். ஆனால், சாமுண்டீஸ்வரி இந்த விஷயத்தை சந்திரகலாவிடம் கேட்க, உண்மையை மறைக்கும் சந்திரகலா, இவங்க என்னை சந்தித்தது உண்மைதான் ஆனால் மருது பத்தி எதுவும் சொல்லல.. அப்படி என்கிட்ட உண்மையை சொல்லி இருந்தா நான் இந்த கல்யாணத்தை நடத்தி இருப்பனா? ரேவதி வாழ்க்கை முக்கியம் இல்லையா என வேஷம் போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications