உயிருக்கு போராடும் ராஜராஜன்.. பழியை கார்த்திக் மேல் போட புது பிளான்.. மாட்டிக்கொள்வாரா சந்திரகலா?

சென்னை: கார்த்திக் சரியான நேரத்தில் கல்யாணத்தை நிறுத்தி மருதுவை போலீஸ் பிடித்து சென்றதும் எல்லோரும் வீட்டிற்கு கிளம்புகின்றனர். அந்த நேரத்தில் தான் கட்டிலுக்கு அடியில் ராஜராஜன் குத்துப்பட்டு கிடப்பதை பார்க்கிறார். பிறகு இந்த விஷயத்தை அறிந்து ராஜராஜனை ஹாஸ்பிடல் அட்மிட் செய்கின்றனர். ரேவதி உன்னால தான் அப்பாவுக்கு இந்த நிலைமை என்ன சாமுண்டீஸ்வரியிடம் கோவப்படுகிறாள். அவளும் தன்னுடைய கணவரின் நிலைமையை பார்த்து கண்கலங்கி நிற்கிறாள்.

இதைத்தொடர்ந்து கார்த்திக் பிரியாவை ஆஸ்பிட்டலில் அட்மிட் செய்து தனக்கு உதவியதற்கு நன்றி சொல்கிறாள். அதன் பின், பிரியாவின் அம்மா சாமுண்டீஸ்வரி சந்தித்து மருது நல்லவன் இல்லை என்ற உண்மையை நான் ஏற்கனவே சந்திரகலாவை சந்தித்து சொன்னேன். ஆனா, அவங்க இந்த கல்யாணத்தை நிறுத்தல என்ற உண்மையை உடைக்கிறார். இதுகுறித்து கார்த்திக் சந்திரகலாவிடம் கேட்கிறான். ஆனால், சந்திரகலா அவங்க என்னை சந்தித்தது உண்மைதான். ஆனால், அவர்கள் ரெஸ்ட்ரூம் எங்கே இருக்கு என்று தான் கேட்டாங்க. மருது பத்தி எதுவும் சொல்லவில்லை என்கிறார். அப்படி என்கிட்ட உண்மையை சொல்லி இருந்தா நான் இந்த கல்யாணத்தை நடத்தி இருப்பேனே? ரேவதி வாழ்க்கை முக்கியம் இல்லையா என வேஷம் போடுகிறாள்.

zee tamil Karthigai Deepam Serial

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், சந்திரகலா கோவிலுக்கு போயிட்டு வருவதாக பொய் சொல்லி சிவனாண்டியை சந்திக்க செல்கிறாள். இதனால், மயில்வாகனத்திற்கு சந்தேகம் வந்து பின் தொடர்கிறான். இதையடுத்து கார்த்திக் மற்றும் ரேவதி ஹாஸ்பிடலில் மயில்வாகனத்திற்கு துணையாக உட்கார்ந்து இருக்கின்றனர். அப்போது ரேவதி அப்பாவை காப்பாத்துறதுக்காக நீங்க ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்க என சொல்லி வருத்தப்பட கார்த்திக் அவளுக்கு ஆறுதல் சொல்கிறான். மயில்வாகனம் மற்றும் சந்திரகலா ஆகியோர் ராஜராஜனை கொன்று அந்த பழியை கார்த்திக் மீது போடுவதற்கு திட்டமிடுகின்றனர்.

zee tamil Karthigai Deepam Serial

கும்பாபிஷேகம் நடக்கும்: பிறகு சிவனாண்டி ஊர் பெரியவர்களிடம் ராஜராஜன் ஹாஸ்பிடலில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார். அவர் இறந்துவிட்டால், இந்த கும்பாபிஷேகத்தை நடத்த முடியாது என்கிறார். இதுகுறித்து பேசுவதற்கான ஊர் பெரியவர்கள் அனைவரும், கார்த்திகை அழைத்து பேசுகின்றனர். அப்போது, கார்த்திக் உண்மையில் மாமா உயிருக்கு போராடிக்கொண்டு தான் இருக்கிறார். ஆனால், இவர் சொல்லும்படி எல்லாம், கும்பாபிஷேகத்திற்கு எந்தவிதமான பிரச்சனையும் வராது. நிச்சயம் தாத்தா சத்தியம் செய்தபடி ராஜராஜ தலையில் நிச்சயம் கும்பாபிஷேகம் நடக்கும் நடத்தி காட்டுவேன் என வாக்கு கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X