மருதுவின் அராஜகம்.. அள்ளிக் கொடுத்த கார்த்தி.. ரேவதிக்குத் தெரிந்த உண்மை.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியல் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி மருது வராததால், கையில் மாலையுடன் மேலே வர மருதுவின் ரூமுக்குள் கார்த்திக் நுழைகிறான். அப்போது, சாமுண்டீஸ்வரி கையில் இருந்த மாலையை கார்த்திக் தட்டிவிட அது பறந்து போய் ரேவதி கழுத்தில் விழுகிறது. அடுத்ததாக கார்த்திக் மருதுவை பார்க்க அவனுக்கு ரூமுக்கு வர அவன் கையில் பெயிண்ட் ஒட்டி இருக்க அவன் தான் ரெட் என்ற உண்மையை கார்த்திக் கண்டுபிடிக்கிறார்.
ஆனால், அதை காட்டிக் கொள்ளாமல், வீட்டிக்குள் ஒரு திருடன் நுழைவதை பார்த்தேன் அதான் வந்தேன் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி வருகிறான். கார்த்திக் இந்த பங்ஷனுக்கு வந்திருப்பதை பார்த்த ரோகினி ரேவதியிடம் கார்த்திக் உன்னை காதலிக்கிறார், அது தான் உண்மை என சொல்லி கலாய்க்கிறாள்.
கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், ரோகினி சொன்னதை கேட்டு குழப்பத்தில் இருக்கும் ரேவதி எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல அக்கா, எனக்கு ஒருவருடன் நிச்சயம் நடந்து இருக்கும் போது எப்படி அக்கா நான் கார்த்தியை காதலிக்க முடியும் என்று சொல்லி வருத்தப்படுகிறாள். ஒருவேளை அவருக்கு என் மேல காதல் இருந்தா, அவர் கண்டிப்பா இந்த கல்யாணத்தை நிறுத்துவாரு என்று சொல்கிறாள். உடனே ரோகிணி அதுவரைக்கும் நீ அமைதியா இருக்க போறியா என்று கேட்க அதுதான் எனக்கு சரின்னு படுது என ரேவதி பதில் கூறுகிறாள்.
கார்த்திக்கிற்கு தெரிந்த உண்மை: மறுபக்கம் கார்த்திக் இன்ஸ்பெக்டரை சந்தித்து ரேவதிக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை தான் அந்த 'ரெட்' என்கிற சந்தேகம் இருக்கிறது. அவன் நேற்று தப்பித்து ஓடும் போது, நான் அவன் மீது பெயிண்ட் டப்பாவை தூக்கி வீசினேன். அதே போல ரேவதிக்கு பார்த்து இருக்கும் மாப்பிள்ளை மீதும் பெயிண்ட் இருந்தது. ஆனால், இந்த காரணத்தை வைத்து அவனை நாம் பிடித்தால் ஏதாவது சொல்லி தப்பித்துவிடுவான் அவனை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என சொல்கிறார்.
யோசித்த ரேவதி: சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு தனது மகளுடன் வரும் ஒரு பெண் தனது மகளின் பள்ளி செலவுக்கு உதவி செய்யுமாறு கேட்க, மருது நான் எதுக்கு உனக்கு உதவி பண்ணனும் என அவமானப்படுத்தி பேசுகிறான். இதை ரேவதி பார்த்து விடுகிறாள். கார்த்திக் எல்லாருக்கும் உதவி பண்ணுவாரு என ஊர் முழுக்க சொல்லிக்கிட்டு இருக்காங்க, ஆனால், இவர் என்ன இப்படி நடந்துக்கிறார். இவர் செய்வதை பார்த்தா ஏதோ தப்பா இருக்கே என யோசிக்கிறாள்.

உதவி செய்தது இவர் தானா: இதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்த பெண்மணியை ரேவதி பார்க்க ஓடிவர அதற்குள் அவர்கள் கிளம்பி செல்கின்றனர். அடுத்ததாக கோவிலுக்கு செல்லும் வழியில் அந்த பெண்ணை பார்த்து, நான் உங்க மகளின் படிப்புக்கு உதவி செய்கிறேன் என சொல்கிறாள். அப்போது அந்த வேறொருவர் உதவி செய்து விட்டதாக சொல்கிறார். பிறகு யாரது என ரேவதி விசாரிக்க கோவிலில் ஊர் பெரியவர்களிடம் பேசிக் கொண்டிருந்த கார்த்தியை கை காட்ட ரேவதி MD கார்த்திக் தான் அந்த உதவியை செய்தாரா எப்படி என்றால், இதுவரை எல்லா உதவிகளை செய்ததும் இந்த கார்த்தி தானா என்பதை தெரிந்து கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications