மகளை வாரி கொடுத்தது போதாதா.. பரமேஸ்வரி பாட்டி உளறிய அந்த பழைய ரகசியம் என்ன? கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில். சிவனாண்டி ஊர் பெரியவர்களிடம் ராஜராஜன் ஹாஸ்பிடலில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார். அவர் இறந்துவிட்டால், இந்த கும்பாபிஷேகத்தை நடத்த முடியாது என்கிறார். இதுகுறித்து பேசுவதற்கான ஊர் பெரியவர்கள் அனைவரும், கார்த்திகை அழைத்து பேசுகின்றனர். அப்போது, கார்த்திக் உண்மையில் மாமா உயிருக்கு போராடிக்கொண்டு தான் இருக்கிறார். ஆனால், இவர் சொல்லும்படி எல்லாம், கும்பாபிஷேகத்திற்கு எந்தவிதமான பிரச்சனையும் வராது. நிச்சயம் தாத்தா சத்தியம் செய்தபடி மாமா ராஜராஜன் தலைமையில் தான் நிச்சயம் கும்பாபிஷேகம் நடக்கும் நடத்தி காட்டுவேன் என வாக்கு கொடுக்கிறான்.
கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், ராஜராஜன் ஹாஸ்பிடலில் ஆபத்தான நிலையில் இருக்க ரேவதி பாட்டி பரமேஸ்வரியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வருகிறாள். இதைப் பார்த்த சாமுண்டீஸ்வரி நீங்க எதுக்கு இங்க வந்தீங்க என கோபப்படுகிறாள். இதை சாதகமாக பயன்படுத்தி சந்திரகலா சாமுண்டீஸ்வரி மேலும் ஏற்றி விட பரமேஸ்வரி பாட்டி அவன் என் பையன் உன்னுடைய குழந்தைங்களுக்கு ஒன்னு தான் நீ எப்படி பதறுவியோ அப்படித்தான் என்னுடைய மகனுக்கு ஒன்னுனா எனக்கும் பதற தான் செய்யும் என சொல்கிறார். மேலும் அவன் உனக்கு புருஷன் ஆவதற்கு முன்னாடியே எனக்கு மகன் அவனை பார்க்கிறதுக்கு எல்லா உரிமையும் எனக்கு இருக்கு என பதில் கொடுக்கிறார்.

மகளே வாரி கொடுத்தது போதாதா: இதையடுத்து, ரேவதி, அப்பாவை பார்க்க பாட்டிக்கு எல்லா உரிமையும் இருக்கு அவங்க பார்க்கட்டும் என உள்ளே அழைத்து செல்ல பரமேஸ்வரி பாட்டி ராஜ ராஜனை பார்த்ததும் கண்கலங்கி அழுகிறார். அய்யோ கடவுளே உன்னை இந்த நிலைமையிலையா நான் பார்க்கணும், ஒரு மகளை பெத்தேன் அவளையும் வாரி கொடுத்துட்டேன், ஆத்தா... மகளை வாரி கொடுத்தது போதாதா.. இப்போ மகனையும் இந்த நிலையில் கொண்டு வந்து இருக்கியே என கதறி அழுகிறார். மேலும், ரேவதி பழசை மறைந்த விஷயத்தை உளறி விட ரேவதி, உடனே என்ன விஷயத்தை பாட்டி நான் மறந்தேன் என்று கேட்க பாட்டி எதையோ சொல்லி சமாளிக்கிறார்.
அதன் பிறகு பாட்டி அங்கிருந்து வெளியே வர சாமுண்டீஸ்வரி இதே காரணமாக வைத்து கொண்டு அடிக்கடி இங்கு வர வேலை வச்சுக்காதீங்க என சொல்ல என் மகனை பார்த்ததே போதும் என கிளம்பி செல்கிறார். பிறகு கார்த்திக் பரமேஸ்வரி பாட்டியை பார்த்து அத்தை பேசியதை மனசுல வச்சுக்காதீங்க என ஆறுதல் சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications