எம்டி கார்த்தி தான் என் முறைப்பையன்.. ரேவதிக்கு தெரியவந்த ரகசியம்.. கார்த்திகை தீபம்!

சென்னை: சாமுண்டீஸ்வரி உதவி கேட்டு ஒரு பெண் மருதுவிடம் தனது மகளின் பள்ளி செலவுக்கு உதவி செய்யுமாறு கேட்க, மருது நான் எதுக்கு உனக்கு உதவி பண்ணனும், கொடுத்து வெச்சமாதிரி பணத்தை கேட்குற என அவமானப்படுத்தி பேசுகிறான். இதை ரேவதி பார்த்து விடுகிறாள். கார்த்திக் எல்லாருக்கும் உதவி பண்ணுவாரு என ஊர் முழுக்க சொல்லிக்கிட்டு இருக்காங்க, ஆனால், இவர் என்ன இப்படி நடந்துக்கிறார். இவர் செய்வதை பார்த்தா ஏதோ தப்பா இருக்கே என யோசிக்கிறாள்.

இதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்த பெண்மணியை ரேவதி உதவி செய்வதற்காக வீட்டிலிருந்து ஓடிவர அதற்குள் அந்த பெண் கிளம்பி செல்கின்றனர். அடுத்ததாக கோவிலுக்கு செல்லும் வழியில் அந்த பெண்ணை பார்த்து, நான் உங்க மகளின் படிப்புக்கு உதவி செய்கிறேன் என சொல்கிறாள். அப்போது அந்த பெண் ராஜா சேதுபதியின் பேரன் உதவி செய்துவிட்டதாக சொல்கிறார். அந்த பேரை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த ரேவதி, அவரை அடையாளம் காட்டமுடியுமா என கேட்க, அந்த கோவிலில் ஊர் பெரியவர்களிடம் பேசிக் கொண்டிருந்த கார்த்தியை கை காட்ட ரேவதி MD கார்த்திக் தான் அந்த உதவியை செய்தாரா எப்படி என்றால், இதுவரை எல்லா உதவிகளை செய்ததும் இந்த கார்த்தி தானா என்பதை தெரிந்து கொள்கிறாள்.

zee tamil Karthigai Deepam Serial
Photo Credit:

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில் ரேவதி வீட்டுக்கு வர அவளுக்குள் எம்டி கார்த்திக் பற்றிய கேள்விகள் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. மறுபக்கம் சாமுண்டீஸ்வரி உனக்குத்தான் கல்யாணம் ஆகப்போவதே, இனிமே வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்ல ரேவதி நீங்க தானே பெண்கள் சொந்தக்காலில் நிற்கணும்னு சொன்னீங்க.. இப்ப ஏன் வேலைக்கு போக வேண்டாம்னு சொல்றீங்க, கல்யாணத்துக்கு பிறகும் நான் வேலைக்கு போவேன் என தனது முடிவில் உறுதியாக இருக்க ஒரு கட்டத்தில் சாமுண்டீஸ்வரி சம்மதம் தெரிவிக்கிறாள்.

கார்த்திக் என் முறைபையன்: பிறகு ரேவதி ஆபீசுக்கு வர, அங்கு பிரீயா அவளைப்பார்த்து உனக்கு தான் கல்யாணம் ஆகப்போகுது எதுக்கு வேலைக்கு வர என்று கேட்க, என்ன நீங்க எங்க அம்மா மாதிரி கேள்வி கேக்குறீங்க. கல்யாணமான வேலைக்கு போகக்கூடாதா, ஒரு பெண் எப்போதுமே சொந்த காலில் தான் நிற்க வேண்டும், நான் கல்யாணத்துக்கு பிறகும் வேலைக்கு வருவேன் என சொல்கிறாள். அப்போது, எம்டி கார்த்திக் மதியத்துக்கு மேல தான் வருவார் என்று பிரியா சொல்ல, உடனே ரேவதி அவர் வரமாட்டார். அவர் கோவில்ல பூஜைக்கான வேலைகளில் இருக்கிறார் என ரேவதி சொல்கிறாள். மேலும் ரேவதி, கார்த்திக் என்னுடைய மாமா பையன், என்னுடைய முறை பையன். ஆனா, இந்த உண்மையை எதுக்காக வீட்டில் இருப்பவர்கள் மறைக்கிறாருன்னு தெரியல என்று சொல்ல பிரியா நீ என்ன சொல்ற என ஷாக் ஆகிறாள். மேலும், ' சந்திரகலாவுக்கு போன் போட்டு ரேவதி இவ்வாறு சொன்ன விஷயத்தை சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X