இந்த கல்யாணம் நடக்காது.. சாமுண்டீஸ்வரியை அலறவிட்ட ரேவதி..கார்த்திகை தீபம்!

சென்னை: எம்.டி கார்த்திக் தான் என்ற முறைமாமன் என்கிற சந்தேகம் இருக்கிறது. அதை உறுதிப்படுத்த வேண்டும் என்றால், கோவிலில் நடக்கும் யாகத்திற்கு சென்றால் கண்டுபிடித்துவிடுவேன் என ரேவதி, பிரியாவிடம் சொல்லிவிட்டுஆபீஸில் இருந்து கோவிலுக்கு வந்து கொண்டிருக்க, இந்த விஷயத்தை பிரியா சந்திரகலாவிடம் சொல்லிவிடுகிறாள். உடனே சந்திரகலா, ரேவதி கோவிலுக்கு செல்வதை தடுப்பதற்காக கால் சுலுக்கி விட்டதாக ஹாஸ்பிடல் அழைத்து செல்லும்படி ரேவதி வரும் வழியில் நாடகமாடுகிறாள்.

பிறகு ரேவதி, சந்திரகலாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறாள். ஹாஸ்பிடலில் வைத்து வேண்டுமென்றே நேரத்தை கடத்துகிறாள். ஆனால், ரேவதி அங்கிருந்து சந்திரகலாவிற்கு தெரியாமல் கிளம்பி கோவிலுக்கு வருகிறாள். யாக பூஜையில் கார்த்திக் உட்கார்ந்து இருக்க ரேவதி ஷாக் ஆகிறாள். ஒருவேளை கார்த்தி தான் தன்னுடைய முறை பையனா என சந்தேகம் கொள்கிறாள். பரமேஸ்வரி பாட்டியை தனியாக அழைத்து தனது தலையில் கை வைத்து உண்மையை சொல்லுங்க கார்த்திக் தான் ராஜா சேதுபதி தாத்தாவோட பேரனா? இன்று கேட்க பரமேஸ்வரி பாட்டி சில உண்மைகளை சொல்கிறாள்.

zee tamil Karthigai Deepam Serial
Photo Credit:

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில் பரமேஸ்வரி பாட்டி, யாக பூஜை நடந்ததும் கோவிலில் வைத்து கார்த்தியுடன் ரேவதிக்கு எல்லா உண்மையும் தெரிந்துவிட்டது. யாகத்தில் நீ இருந்ததை பார்த்த ரேவதி, நீ தான் ராஜா சேதுபதியோட பேனா உண்மையை சொல்லுங்க என தலையில் கை வைத்து கேட்டாள், என்னால் சமாளிக்க முடியாமல் உண்மையை சொல்லி விட்டதாக சொல்கிறார். உடனே கார்த்திக், சரி விடுங்க பாட்டி என்னைக்காக இருந்தாலும் ரேவதிக்கு தெரிய வேண்டிய உண்மை தானே, விடுங்க என்கிறார்.

மறுத்த ரேவதி: கோவத்தோடு வீட்டுக்கு வந்த ரேவதி, சாமுண்டீஸ்வரியிடம் எதுக்கு இப்படி ஒரு பொய்ய சொல்லி எனக்கு கல்யாணம் பண்ணி பாக்குறீங்க என கோபப்படுகிறாள். உடனே சாமுண்டீஸ்வரி, இவன் கார்த்தியைவிட நல்லவன், இந்த மாதிரி வரன் அமையாது, அதனால் தான் உன்னிடம் பொய் சொன்னேன் என்கிறாள். என்னது பொய் சொன்னீங்களா, தாதா குடும்பமும் நம்ப குடும்பமும் ஒன்னா சேர வேண்டும் என்பதற்காகத்தான் நான் இந்த கல்யாணத்திற்கே சம்பதித்தேன். ஆனால், அது உண்மை இல்லாத போது, இந்த திருமணம் வேண்டாம் என்று அதிர்ச்சி கொடுக்க சாமுண்டீஸ்வரி அதிர்ச்சி அடைகிறாள்.

zee tamil Karthigai Deepam Serial
Photo Credit:

மிரட்டிய சாமுண்டீஸ்வரி: உடனே சாமுண்டீஸ்வரி, கல்யாணம் என்பது இந்த ஒரு விஷயத்தை வைத்து மட்டும் முடிவு செய்யும் விஷயம் இல்லை. மருது உன்னை காலம் முழுக்க வெச்சி காப்பாத்துவான், உன் வாழ்க்கைக்கு எது நல்லாதுனு யோசிச்சித்தான் நான் இந்த மாப்பிள்ளையை உனக்கு கல்யாணம் செய்துவைக்க நினைக்க முடிவு எடுத்தேன். இங்கு என்னோட முடிவு தான் கடைசியாக இருக்க வேண்டும் என்று சொல்ல, கோவப்படும் ரேவதி நீங்க எடுக்கும் முடிவுக்கு எல்லாம் என்னால் கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று சொல்கிறாள்.

இதனால், ஆத்திரப்படும் சாமுண்டீஸ்வரி, நீ மட்டும் மருதுவை கல்யாணம் பண்ணிக்கவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வேன் என பயத்தை காட்டுகிறாள். இதனால் ரேவதி வேறு வழியில்லாமல் மருதுவுடன் திருமணத்திற்கு சம்மதம் சொல்கிறாள். மயில்வாகனம் மூலமாக கார்த்திக்கு இந்த விஷயம் தெரிய வருகிறது. மேலும் ரோகிணி எதுக்கு நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன என்று கேட்க கார்த்திக் எப்படியும் இந்த கல்யாணத்தை நிறுத்திடுவார்னு என்கிற நம்பிக்கை இருப்பதாக சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X