உண்மையை ஏன் மறைச்சீங்க? கார்த்தியிடம் கண்கலங்கிய ரேவதி.. கார்த்திகை தீபம்!

சென்னை: ரேவதிக்கு உண்மை தெரிந்ததால் இந்த கல்யாணத்திற்கு நான் சம்பதிக்க மாட்டேன், இந்த கல்யாணம் நடக்காது என்று தகராறு செய்கிறாள். இதனால், ஆத்திரப்படும் சாமுண்டீஸ்வரி, நீ மட்டும் மருதுவை கல்யாணம் பண்ணிக்கவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வேன் என ரூமுக்குள் என்று நாடகமாடுகிறாள். இதனால் ரேவதி வேறு வழியில்லாமல் மருதுவை திருமணம் செய்து கொள்வதாக சொல்கிறாள்.

இந்த விஷயத்தை மயில்வாகனம் கார்த்திக்கிடம் சொல்ல, ரேவதிக்கு உண்மை தெரிந்துவிட்டது. இது போதும் இதுக்கு மேல, இந்த கல்யாணம் நடக்காது என்று சொல்கிறார்.இதையடுத்து, அழுதுகொண்டு இருக்கும் ரேவதிக்கு ஆறுதல் சொல்லும் ரோகிணி, எதுக்கு நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன, எல்லாமே அம்மாவின் நாடகம் அது தெரியாமல் நீ கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லி இருக்க என்று கேட்க, கார்த்திக் எப்படியும் இந்த கல்யாணத்தை நிறுத்திடுவார்னு என்கிற நம்பிக்கை இருப்பதாக சொல்கிறாள்.

zee tamil Karthigai Deepam Serial
Photo Credit:

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், அடுத்த நாள் ஆபீசுக்கு வரும் ரேவதி, கார்த்திகை சந்தித்து, நீங்க தான் என் மாமா என்று எதுக்கு சொல்லவில்லை. வீட்டுல இருக்குறவங்க தான் எல்லா உண்மையும் மறைச்சாங்கனா நீங்க ஏன் மறைச்சீங்க, அதுக்கான காரணம் என்ன என கேள்வி கேட்கிறாள். உடனே கார்த்திக், மறைக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லை. நீங்க என்கிட்ட எதுவும் கேட்கல அதனால நானும் சொல்லல என சொல்லி கார்த்திக் ரேவதியை சமாளிக்கிறான்.

எதிரியை கண்டுபிடித்த கார்த்திக்: அதைத்தொடர்ந்து, கார்த்திக்கு ரேவதியை விபத்தில் சிக்க வைத்தவர்களின் சம்பந்தப்பட்டவர்கள் வீடியோ கிடைத்து இருக்கிறது என இன்ஸ்பெக்டர் சொல்ல கார்த்திக் கிளம்பி வருகிறான். உடனே இன்ஸ்பெக்டர் இவங்க இரண்டு பேரும் துணிக்கடையில் வேலை பார்த்த முருகன், பரமேஸ்வரன் என்பது தெரியவருகிறது. அவர்களை பிடித்தா இவங்க பின்னாடி யார் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும் என சொல்கிறார். இதையடுத்து, கார்த்திக் முருகன் மற்றும் அவனது நண்பனை பார்த்துவிட, அவர்களை பிடிப்பதற்காக துரத்த ஒருவன் வண்டியில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விடுகிறான்.

சிவனாண்டியின் பிளான்: இன்னொருவன் தப்பி ஓட அதனை சிவனாண்டி, முத்துவேல் ஆகியோர் பார்த்து அவனை காப்பாற்றி அழைத்து வந்து, எதற்காக கார்த்திக் உன்னை துரத்துகிறான் என்ன பிரச்சனை, நிச்சயம் நான் உன்னை காப்பாத்துகிறேன் என்று சொல்ல, முருகன் நடந்த விஷத்தை சொல்கிறான். இந்த விஷயத்தை சிவனாண்டி சந்திரகலாவிடம் சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X