மருதுதான் அந்த ஆபாச வீடியோ கேங் தலைவன்.. ரேவதி வாழ்க்கையை அழிக்கத் துடிக்கும் சந்திரகலா!
சென்னை: ரேவதியின் இந்த நிலைமைக்கு காரணம் துணிக்கடையில் வேலை பார்த்த
முருகன், பரமேஸ்வரன் என்பது தெரியவருகிறது. அவர்களை பிடித்தால் இவங்க பின்னாடி யார் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும் என சொல்கிறார். இதையடுத்து, கார்த்திக் முருகன் மற்றும் அவனது நண்பனை பார்த்துவிட, அவர்களை பிடிப்பதற்காக துரத்த ஒருவன் வண்டியில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விடுகிறான். முருகன் தப்பி ஓட அவனை சிவனாண்டி, முத்துவேல் ஆகியோர் பார்த்து காப்பாற்றி அழைத்து வந்து, எதற்காக கார்த்திக் உன்னை துரத்துகிறான் என்ன பிரச்சனை, நான் நிச்சயம் உன்னை காப்பாத்துகிறேன் என்று சொல்ல, முருகன் நடந்த விஷத்தை சொல்கிறான்.
கார்த்திகை தீபம்: இந்த விஷயத்தை சிவனாண்டி சந்திரகலாவிடம் சொல்ல, இது போனில் பேசக்கூடிய விஷயம் இல்லை. இதில் ஏதோ விவகாரம் இருக்கு நான் நேரில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு சந்திரகலா செல்கிறாள். பின் முருகனிடம் சந்திரகலா துருவி துருவி விசாரிக்க முருகன் ரெட்டை பற்றி உண்மையை சொல்ல, மருது தான் ரெட் என உண்மை தெரிய வருகிறது. சந்திரகலா இந்த உண்மை சாமுண்டீஸ்வரிக்கு தெரிய வேண்டாம் அந்த ரேவதியோட வாழ்க்கை நாசமா போகட்டும், அக்காவிற்கு தெரியாமலே இந்த கல்யாணத்தை நடத்த வேண்டும் என திட்டமிடுகிறாள்.

கார்த்திக் ரேவதி ரொமான்ஸ்: இதைத்தொடர்ந்து ஊர் மக்கள் கோவில் பூஜைக்காக அழைக்க சாமுண்டீஸ்வரியன் வீட்டிற்கு வருகை தருகின்றனர். சாமுண்டீஸ்வரி அதெல்லாம் வேண்டாம் என்று மறுக்க, ரேவதி நான் போறேன் என சொல்லிவிட்டு ரோகினி மற்றும் மயில்வாகனத்தை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு செல்கிறாள். அங்கே கார்த்தியை சந்திக்க நீங்க என் மாமா தானே, இத்தனை நாள் யார் என்று தெரியாமல், சார் என அழைத்து வந்தேன். ஆனால், அப்போ தான் மாமா என்று தெரிந்துவிட்டதே, நான் உங்களை மாமா என்று கூப்பிடுகிறேன் என்று சொல்ல இருவருக்கும் இடையே காதல் அலை பாய்கிறது. ரேவதி கார்த்திக்கு இந்த கல்யாணத்தை நிறுத்தி தன்னை திருமணம் செய்து கொள்வான் என எதிர்பார்க்கிறாள்.
பரிகார பூஜை: மறுபக்கம் கார்த்திக் மயில்வாகனத்தை தனியாக அழைத்து அத்தை சாமுண்டீஸ்வரி ரேவதிக்கு பார்த்து இருக்கும் மாப்பிள்ளை நல்லவன் இல்லை. அவன் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து விற்பனை செய்யும் ரெட் என்ற உண்மையை சொல்கிறார். இதை கேட்டு மயில்வாகனம் அதிர்ச்சி அடைகிறார். மறுபக்கம், சந்திரகலா ஒரு ஜோசியரை அனுப்பி இந்த கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றால் ஒரு பரிகாரம் செய்ய வேண்டும் என சொல்ல வைக்க திட்டம் போட்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications