வசமாக சிக்கிய சந்திரகலா.. கார்த்தியிடம் சிக்கிய வீடியோ ஆதாரம்.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றை எபிசோடில் ரேவதி, வீட்டிற்குள் வராமல் தர்ணா செய்து கொண்டு இருக்கிறாள். இதைப்பார்த்த ரோகிணி, ராஜராஜன் வீட்டிற்குள் வா, எதற்காக இப்படி பிடிவாதம் பிடிக்க வேண்டும் என சொல்லா, அப்போது ரேவதி, அப்பா நான் சாமுண்டீஸ்வரி யோட பொண்ணு அவங்களுக்கு இருக்குற பிடிவாதத்துல கொஞ்சம் கூட எனக்கு இருக்காதா? என் புருஷன் கார்த்திக் நிரபராதி என்பது நிரூபிச்ச பிறகு தான் வீட்டுக்குள் வருவேன் என தீர்க்கமாக சொல்கிறாள்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், முத்துவேல் சந்திரகலாவிற்கு ஃபோன் செய்து, நாம மோசம் போய்விட்டோம். ரௌடி சண்முகம் நம்மை ஏமாற்றி விட்டான். அவன் புதையல் நகையில் பாதியைத்தான் புதைத்து வைத்து இருக்கான். மீதி 100 சவரன் நகைகளை வீட்டில் பதுக்கி வைத்து இருக்கான். அவனுடைய அண்ணன், நகையை விற்பதற்காக வேறு ஒருவருடன் பேரம் பேசுவதே நான் கேட்டேன் என சொல்கிறார். இதைக்கேட்டு சந்திரகலா, ரவுடி சண்முகம் வீட்டிற்கு சென்று, அவரது மனைவியிடம் நகை எங்கே என கேட்டு முரட்டுகிறாள். அவரது மனைவி, எனக்கு நகையைப் பற்றி எதுவும் தெரியாது, அவர் விபத்தில் சிக்கி கோமாவில் இருக்கிறார். அவர் கண் விழித்தால்தான் எல்லாம் தெரியும் என சொல்கிறாள்.
சிக்கிய சந்திரகலா: ஆனால், சந்திரகலா அவரிடம் நான் நகையை கொடுத்து ஒருவரிடம் கொடுக்க சொன்னேன். ஆனா, உன் புருஷன் அவரிடம் நடிகையை தராமல் வீட்டில் பதுக்கி வைத்திருக்கிறார். அது கோவில் நகை, இப்போ அந்த நகையை தரவில்லை என்றால் போலீசில் புகார் கொடுப்பேன் என்று சொல்லி மிரட்ட பயந்து போன ரவுடியின் மனைவி நகையை சந்திரகலாவிடம் கொடுக்கிறாள். நகையை வாங்கிய சந்திரகலா, இதுபற்றி யாரிடமாவது சொன்னீனா? உன்னுடைய இரண்டு குழந்தைகளும் உயிரோடு இருக்க மாட்டாங்க என மிரட்டிவிட்டு செல்கிறாள். இவை அனைத்தை அந்த பெண் கார்த்திக் சொன்னது போல வீடியோவாக எடுத்து, கார்த்திக்கிடம் கொடுத்து விடுகிறாள். அந்த வீடியோவை வாங்கிய கார்த்தி, நீங்கள் செய்த உதவிக்கு மிகவும் நன்றி நிச்சயமாக உங்களுடைய கணவர் குணமாகி விடுவார், உங்களுக்கு அனைத்து உதவிகளையும் நான் செய்கிறேன் என்று உறுதி கொடுக்கிறார்.
கார்த்தியின் பிளான்: அந்த வீடியோவை கார்த்தி, மயில்வாகனத்திடம் காட்ட, அந்த வீடியோவை பார்த்த மயில்வாகனம், சின்ன அத்தை என்ன வேலை செய்து இருக்காங்கனு பாத்தியா சகல, ஆனால், வெறும் வீடியோ ஆதாரத்தை வைத்து சந்திரகலாவை குற்றவாளியாக நிரூபிக்க முடியாது என மயில்வாகனம் சொல்கிறார். அப்போது, கார்த்திக் நீங்க சொல்வதும் சரிதான், எப்படியோவது பொய்யை சொல்லி தப்பித்துவிடுவார் என்கிறார். இதையடுத்து இருவரும் சேர்ந்து குற்றவாளிகளை சிக்க வைக்க ஒரு திட்டத்தை தீட்டுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











