சந்திரகலாவின் கதை முடிந்தது.. கார்த்திக் செய்தது என்ன? கார்த்திகை தீபம்!

சென்னை: சந்திரகலா ரௌடியின் மனைவியை மிரட்டி 100 சவரன் நடிகை வாங்கி விடுகிறாள். இதை வீடியோவாக எடுத்து அந்த பெண் காத்திக்கிடம் கொடுக்கிறாள். அந்த வீடியோவை கார்த்தி, மயில்வாகனத்திடம் காட்ட, அந்த வீடியோவை பார்த்த மயில்வாகனம், சின்ன அத்தை என்ன வேலை செய்து இருக்காங்கனு பாத்தியா சகல, இந்த வீடியோவை சாமுண்டீஸ்வரி அத்தையிடம் காட்டி, சந்திரகலாவை வீட்டை விட்டு அனுப்பி விடலாம் என்கிறார்.

ஆனால், கார்த்திக், இல்லை சகல, வெறும் வீடியோ ஆதாரத்தை வைத்து சந்திரகலாவை குற்றவாளியாக நிரூபிக்க முடியாது. புதையல் நகையை திருடியதில் சிவனாண்டிக்கும் பங்கு இருக்கு என்பதையும் நாம நிரூபிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் சிவனாண்டியும், சின்ன அத்தையும் சேர்ந்து தான் எல்லாத்தையும் செய்கிறார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் என்கிறார். இதைக்கேட்ட, மயில்வாகனம், சகல நீ சொல்வதும் சரிதான். இருவரும் சேர்ந்து குற்றவாளிகளை சிக்க வைக்க ஒரு திட்டத்தை தீட்டுகின்றனர்.

100 25 Zee
Photo Credit:

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், முத்துவேல் மற்றும் சிவனாண்டி இருவரும், தேர்தலுக்காக வாங்கிய கடனை அடைப்பதற்காக திருடிய நகையில் 25 சவரன் நகையை விற்று விடலாம் என முடிவெடுக்கின்றனர். இதுகுறித்து பேசுவதற்காக சந்திரகலா, சிவனாண்டி மற்றும் முத்துவேல் ஆகியோர் ஒன்று சேர்ந்து ஒரு தோப்பில் சந்திக்கின்றனர்.
அங்கு நகையை கைமாற்றிக் கொள்ள அப்போது அதை மறைந்திருந்து வீடியோ எடுக்கிறான் மயில்வாகனம்.

கார்த்திக்கின் திட்டம்: பிறகு சேட்டிடம் சென்று நகையை கொடுத்து இது பூர்வீக நகை அவசரத் தேவைக்காக கொடுக்கிறேன் என சொல்லி பணத்தை வாங்க இதையும் வீடியோவா எடுக்கின்றனர். பணத்தை வாங்கிக் கொண்டு அனைவரும் அங்கிருந்து சொல்ல, முத்துவேல் தனது போனை சேட்டின் வீட்டில் மறந்து வைத்துவிட்டு செல்கிறான். இதையடுத்து, கார்த்திக் சேட்டிடம் பணத்தை கொடுத்து அதன் நகைகளை வாங்க முத்துவேல் தனது ஃபோனை எடுக்க மீண்டும் அங்கு வர, அங்கு கார்த்திக் தீட்டிய திட்டம் என்ற உண்மை தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X