வீடியோவை காட்டிய கார்த்திக்.. சாமுண்டீஸ்வரி காலில் விழுந்து கெஞ்சும் சந்திரகலா.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில், முத்துவேல் கார்த்தியின் திட்டத்தை தெரிந்து கொண்டு வெளியில் ஓடுகிறான். முத்துவேல் தப்பிக்க முயற்சி செய்ய இதை பார்த்த கார்த்திக், மயில்வாகனம் அவனை மடக்கி பிடித்து ஒரு அறைக்குள் அடைத்து வைக்கின்றனர். இவன் மட்டும் வெளியே போனால் நம்முடைய திட்டம் அனைத்தும் வேஸ்ட்டா போயிடும் என சொல்கிறான்.
பிறகு சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு, கை ரேகை நிபுணர் வருகின்றனர். இந்த வீட்டில் இருந்து தான் புதையல் நகை திருடுபோனது, இதனால் அந்த நகையில் இருக்கும் கை ரேகையும், வீட்டில் இருப்பவர்களின் கை ரேகையும் ஒத்து போகியதா என்பதை பார்க்க வேண்டும் என சொல்கிறார். இதையடுத்து, வீட்ல இருக்கும் அனைவரிடதிரும் கைரேகையும் பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால், சந்திரகலா மட்டும் நான் கை ரேகையை வைக்க மாட்டேன், இந்த டிரைவர் ஏதாவது திட்டம் போட்டு இருப்பான் என்று சொல்ல, சாமுண்டீஸ்வரி நீ எதுக்கு பயப்பட வேண்டும், தப்பு செய்தவர்கள் தான் பயப்பட வேண்டும் என்கிறாள்

கார்த்திகை தீபம்: இதையடுத்து, சந்திரகலாவின் கைரேகை ஒத்துப்போவதராக சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். உடனே மயில்வாகனம், பாத்தீங்களா அத்தை, சின்ன அத்தை என்ன செய்து இருக்காங்கனு, கூட இருந்துக்கிட்டே சொத்த அக்காவிற்கு இப்படி ஒரு துரோகத்தை எப்படி உங்களால் செய்ய முடிகிறது என அடுத்தடுத்து கேள்வி கேட்கிறார். உடனே சந்திரகலா, பாத்தியா அக்கா, எல்லாரும் சேர்ந்து என் மேல பழிபோடுங்க, இதுக்குத்தான் நான் கை ரேகை வைக்க மாட்டேன் என்று சொன்னேன். இந்த வீட்டில் யாருக்குமே என்னை பிடிக்காது அதான், இப்படி ஒரு பழியை போட்டு உன்னையும் என்னையும் பிரிக்க பாக்குறாங்க என சொல்கிறாள்.
காலில் விழுந்து கெஞ்சும் சந்திரகலா: உடனே, இது மட்டும் இல்ல அத்தை இன்னோரு வீடியோ ஆதரமும் என்னிடம் இருக்கு என்று சந்திரகலா, ரௌடியின் மனைவியை மிரட்டி நகையை வாங்கியதை போட்டு காட்டுகிறார். இதைப்பார்த்த சாமுண்டீஸ்வரி என்னடி இது, என்கூட இருக்துக்கிட்டே நீ எனக்கு துரோகம் செய்து இருக்கியா என்று சொல்கிறாள்.உடனே அக்கா, இதுவும் உண்மை இல்லை எல்லாம் பொய் சொல்றாங்க என சொல்கிறாள். அது எப்படி, கைரேகையும் ஒத்துப்போகும், வீடியோவில் தான் நீ தெளிவாக பேசி இருக்கியே, எனக்கு எப்படி சந்திரா உன்னால் துரோகத்தை நினைக்க முடிஞ்சது என கேட்க, சந்திரகலா, சாமுண்டீஸ்வரியும் காலில் விழுந்து கெஞ்சுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











