கொளுத்திக்கிட்டு செத்துவிடுவேன்.. ஜாமீனில் வெளியே வந்த சந்திரகலா நாடகம்.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்தி செய்தது சரியாக இருந்தாலும், அவன் இந்த வீட்டிற்குள் வரக்கூடாது, என் தங்கை இப்படி செய்வதற்கு காரணமே இந்த கார்த்தி தான், இதுக்கு முன் சந்திராவிற்கு இந்த திருட்டு புத்தி இல்லை. ஆனால், கார்த்திக் இந்த வீட்டிற்குள் வந்த பின் தான் இப்படி ஒரு எண்ணமே அவளுக்கு வந்து இருக்கு, எது எப்படி இருந்தாலும், கார்த்திக் இந்த வீட்டிற்குள் வரக்கூடாது என்று சொல்கிறாள். அப்போது ரேவதி, அவருக்கு இந்த வீட்டில் இடமில்லை என்றால், நானும் வீட்டிற்குள் வரமாட்டேன், அப்படியே அவர் கூடவே சென்றுவிடுவேன் என்று சொல்கிறாள். இதையடுத்து, இதையடுத்து, ராஜராஜன் எடுத்து சொல்ல சாமுண்டீஸ்வரி கார்த்தியை வீட்டிற்குள் வர அனுமதிக்கிறாள்.
இதையடுத்து, கார்த்தி காவல்நிலையத்திற்கு சென்று சந்தி'ரகலா மீது புகார் கொடுக்க சந்திரகலா, டேய் டிரைவர் ரொம்ப சந்தோஷப்படாதே, கூடிய சீக்கிரம் நான் வெளியில் வந்து உன்னையும் ரேவதியையும் பிரிப்பேன், இப்போ வேணும்னா ஜெயித்து இருக்கலாம். ஆனால், என்னை ஜெயிலுக்கு அனுப்புன உன்னை நான் சும்மாவே விடமாட்டேன் என்று சவால் விடுகிறாள்.

கார்த்திகை தீபம்: மறுபக்கம் சாமுண்டீஸ்வரி, சந்திரகலா செய்த துரோகத்தை நினைத்து சாப்பிடாமல் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க மகள்கள் மூவரும் சேர்ந்து சந்திரகலாவை சமாதானம் செய்கின்றனர். ஆனாலும், சாமுண்டீஸ்வரி அம்மாவின் போட்டோவை பார்த்துக்கொண்டு, அம்மா, ஏன் சந்திரா எனக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்தா, அவளை என் மகளா தானே நான் பார்த்தேன் அப்படி இருக்கும் போது என்னை இப்படி ஏமாற்றவிட்டாலே என்று புலம்பிக்கொண்டு இருக்கிறாள். அப்போது அந்த வீட்டில் வேலை செய்யும் மீனாட்சி, அம்மா நீங்க காலையில் இருந்து சாப்பிடவே இல்லை. இப்பவும் சாப்பிடவில்லை என்றால், உடம்புக்கு என்னாகுமா என கேட்க, சாமுண்டீஸ்வரி, வேண்டாமா நான் சாப்பிடும் மனநிலையில் இல்லை என சொல்லி வருத்தப்படுகிறாள.
ஜாமீனில் வெளியேவந்த சந்திரகலா: மறுபக்கம் ஜெயிலில் இருக்கும் சந்திரகலாவை சிவனாண்டி ஜாமீனில் வெளிய எடுக்கிறான். இனிமே நீ அவங்களோட இருக்க வேண்டாம் என்கூடவே வந்துவிடு என்று சொல்லி கூப்பிட இல்ல இனிமேதான் நான் அவ கூட இருக்கணும். அப்பதான் அவளை பழி வாங்க முடியும் என சொல்கிறாள். பிறகு சந்திரகலா சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வர அவளை பார்த்ததும் சாமுண்டீஸ்வரி உட்பட அனைவரும் கோபமடைகின்றனர். எனக்கு உன்ன விட்டா வேற யாரு அக்கா இருக்கா எனது சந்திரகலா நாடகமாட சாமுண்டீஸ்வரி மரியாதையா வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்கிறாள். நீ ஏன் இப்படி சொன்னதுக்கு அப்புறம் நான் எதுக்கு உயிரோட இருக்கணும் என சந்திரகலா நான் இங்கேயே கொளுத்திக்கிட்டு செத்துப் போறேன் என நாடகமாடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











