கோவிலில் தாலியை கழட்டிய சந்திரகலா.. காசு வெட்டி பிரிச்சாச்சி.. கார்த்திகை தீபம்!
சென்னை: ஜெயிலில் இருந்த சந்திரகலாவை சிவனாண்டி ஜாமீனில் வெளியே எடுத்ததை அடுத்து, இனிமே நீ அவங்களோட இருக்க வேண்டாம் என்கூடவே வந்துவிடு என்று சொல்கிறான். ஆனால், சந்திரகலா இனிமே தான் அந்த வீட்டில் எனக்கு வேலை இருக்கு, அதே வீட்டில் இருந்தால் தான் அவளை நான் பழிவாங்க முடியும் என்று சொல்கிறார். இதையடுத்து, சிவனாண்டி, சரி சந்திரா நீபோ, ஆனால், சாமுண்டீஸ்வரி உள்ளே சேர்க்கவில்லை என்றால் நீ வந்துவிடு என சொல்கிறான்.
இதையடுத்து, சந்திரகலா சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வர அவளை பார்த்ததும் அனைவரும் கோபமடைகின்றனர். அப்போது, சந்திரகலா, எனக்கு உன்ன விட்டா வேற யாரு அக்கா இருக்கா என சொல்ல, சாமுண்டீஸ்வரி மரியாதையா வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்கிறாள். அப்போது, இது எல்லாத்துக்கும் காரணம் இந்த டிரைவர் தான், அவனை பாக்க பாக்க, அம்மா இறந்து போன விஷயம் தான் எனக்கு ஞாபகத்திற்கு வந்துச்சு. அதனால், இவனை பழிவாங்க நினைத்தேன். இதை எப்படியோ தெரிந்து கொண்ட சிவனாண்டி என்னிடம், இந்த கார்த்தியை பழிவாங்க நகை திருடும் ஐடியாவை கொடுத்தான் என சொல்கிறாள்.

கார்த்திகை தீபம்: என்னை நம்புக்கா, நான் என்னைக்கும் உனக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று சொல்கிறாள். இதையடுத்து, இதுக்கு மேலையும் நீ நம்பவில்லை என்றால், நான் என் உயிரோட இருக்கணும் என சந்திரகலா, அங்கிருந்த மண்ணெண்னை கேனில் இருந்த எண்ணைய்யை உடல் முழுக்க ஊற்றிற்கொண்டு, இந்த அக்கா நீயோ என்னை கொளுத்திவிடு, நான் செத்துப் போறேன் என நாடகமாடுகிறாள். இதையெல்லாம் பார்த்து நம்பி சந்திரகலா, நான் உன்னை நம்ப வேண்டும் என்றால், நீ பஞ்சாயத்து முன்பு ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். அதாவது, அந்த சிவனாண்டி கட்டிய தாலியை கழட்டிவிட்டு, காசு வெட்டிப்போட வேண்டும், அதை செய்தால் நான் உன்னை நம்புகிறேன் என சொல்கிறாள்.
தாலியை கழட்டிய சந்திரகலா: மனவேதனையில் சந்திரகலா: இதற்கு சந்திரகலா சம்மந்தம் சொல்லியதை அடுத்து, பஞ்சாயத்து கூட்டப்பட்டு சிவனாண்டி மற்றும் சந்திரகலாக இருவரும் மனப்பூர்வமாக பிரிகிறார்கள். இவர்கள் இருவருக்கும் இனி எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்ல அனைவர் முன்பும் சந்திரகலா தாலியை கழட்டி கொடுக்கிறாள். மேலும்,கோவிலில் காசு வெட்டி போட்டு இருவரையும் பிரிக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











