சந்திரகலாவை நினைத்து விஷம் குடித்த சிவனாண்டி.. கார்த்திக் செய்ய போவது என்ன? - கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில் சந்திரகலா என்னை யாரும் மிரட்டவில்லை என்று சொல்லியதை அடுத்து, சிவனாண்டி மற்றும் சந்திரகலாக இருவரும் மனப்பூர்வமாக பிரிகிறார்கள். இவர்கள் இருவருக்கும் இனி எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்ல அனைவர் முன்பும் சந்திரகலா தாலியை கழட்டி கொடுக்கிறாள். மேலும்,கோவிலில் காசு வெட்டி போட்டு இருவரையும் பிரிக்கின்றனர். இதையடுத்து வீட்டிற்கு வரும் சந்திரகலா, சாமுண்டீஸ்வரி தனது அறைக்கு சென்ற பின், என்னடா, சந்திரா நல்லா மாட்டிக்கிட்டா இனி மே அவ, இந்த வீட்டுக்குள்ள வரவே மாட்டானு நினைச்சீங்களா எப்படி வந்தேன் பாத்தீங்களா, இனிமேல் தான், இந்த சந்திரகலாவின் ஆட்டத்தை பாப்பீங்க என சொல்கிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், கார்த்திக், சின்ன அத்தை வாழ்க்கையில் அப்படி என்ன நடந்தது, ஏன் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள் என கேட்கிறார்த. இதையடுத்து, ராஜராஜன் கார்த்தியிடம் சந்திரகலா கல்லூரி படிக்கும் போது சிவனாண்டியை காதலித்தார். திருமணம் செய்து கொள்ள சாமுண்டீஸ்வரி சம்மதிக்கவில்லை, அவன் நல்லவன் இல்லை என சொன்னதால், இருவரும் யாருக்கும் தெரியாமல் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்த விஷயம் தெரிந்த சாமுண்டீஸ்வரி சந்திராவை அவனிடம் இருந்து பிரித்து அழைத்து வந்துவிட்டார். அதில் இருந்து 10 வருஷமா சந்திரகலா இங்கு தான் இருக்கிறாள். இந்த ஆத்திரத்தில் தான் சந்திரா அக்காவையே பழி வாங்க நினைக்கிறாள் என்று சொல்கிறார். இதை கேட்ட கார்த்திக் எல்லாத்தையும் நான் சரி செய்யுறேன் என்று வாக்கு கொடுக்கிறான்,

விஷம் கொடுத்த சிவனாண்டி: பிறகு சந்திரகலாவுக்கு சிவனாண்டி விஷம் குடித்து விட்டதாக போன் கால் வர சந்திரகலா பதறியடித்து ஓடுகிறாள். எதுக்கு இப்படி பண்ணீங்க? என் அக்காவுக்கு கிடைக்குற அத்தனை மரியாதையும் உங்களுக்கு கிடைக்க வைப்பேன், அதுவரைக்கும் நான் ஓய மாட்டேன் என்று சபதம் செய்கிறாள். அடுத்த நாள் கார்த்திக் மற்றும் மயில்வாகனம் ஆகியோர் ஹோட்டல் கடை திறப்பது குறித்து சாமியாரிடம் பேசி கொண்டிருக்க சிவனாண்டி இதை ஒட்டு கேட்டு விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X