முதல் திருமண நாள்.. கார்த்திக் செய்யப் போவது என்ன? கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில் சந்திரகலா பிரிந்து சென்றதை நினைத்து கஷ்டப்பட்ட சிவனாண்டி விஷம் குடித்து விட்டதாக ஃபோன் கால் வர சந்திரகலா பதறியடித்து ஓடுகிறாள். எதுக்கு இப்படி பண்ணீங்க? என் அக்கா கூட நான் அதே வீட்டில் இருந்தால் தான், அந்த டிரைவர், ரேவதியை பிரிக்க முடியும், அது மட்டுமில்லாமல் அக்காவுக்கு கிடைக்குற அத்தனை மரியாதையும் உங்களுக்கு கிடைக்க வைப்பேன், அதுவரைக்கும் நான் ஓயவே மாட்டேன் என்று சபதம் செய்கிறாள்.
அடுத்த நாள் கார்த்திக் மற்றும் மயில்வாகனம் ஆகியோர் ஹோட்டல் கடை திறப்பது குறித்து ஜோசியரிடம் நல்ல நாளை கேட்க அவர், நாளைக்கு நல்ல நாள் தான், கடை திறப்பு விழாவை நாளைக்கே வைத்துக்கொள்ளலாம் என்றார். இதையடுத்து, சிவனாண்டி ஒட்டு கேட்டு விடுகிறார். இந்த விஷயத்தை, சிவனாண்டி சந்திரகலாவை சந்தித்து மயில்வாகனம் ஓட்டல் கடை திறக்கும் விஷயத்தை சொல்கிறான்.

கார்த்திகை தீபம்: மறுபக்கம், கார்த்திக் முதல் நாள் திருமண நாளுக்கு ரேவதிக்கு ஒரு வீட்டை பரிசாக கொடுக்க திட்டம் போட்டு இருக்கிறார். அதே போல ரேவதி, கார்த்திக்கிற்கு என்ன வாங்கி தரலாம் என யோசிக்க பைக் வாங்கி கொடுக்கலாம் என திட்டம் போடுகிறாள். இதையடுத்து, ரேவதி, ரோகினி பைக் ஷோரூமுக்கு சென்று பைக்கை புக் செய்கின்றனர். ஆனால், பைக் அடுத்த மாதம் தான் டெலிவரி கிடைக்கும் என்று சொல்ல, ரேவதி எனக்கு கல்யாண நாளுக்காக தான் இந்த பைக்கை வாங்குவதாகவும் உடனடியாக டெலிவரி தேவை எனவும் கேட்க கடையில் சீக்கிரம் டெலிவரி செய்ய முயற்சி செய்வதாக சொல்கின்றனர்.
ரகசிய கேமரா: மறுபக்கம் வீட்டுக்கு வந்த சந்திரகலா, சாமுண்டீஸ்வரியிடம் மயில்வாகனம் ஹோட்டல் கடை திறக்கப்படும் விஷயத்தையும் அதற்கு கார்த்திக் உதவி செய்யும் விஷயத்தையும் சொல்லி போட்டு கொடுக்கிறாள். இதை இப்படியே விட்டா கார்த்திக் ஒவ்வொருத்தரா அவன் பக்கம் இழுத்துருவான் என ஏற்றி விடுகிறாள். பிறகு ரேவதி ஒரு துணி கடைக்கு வர அங்கு ட்ரையல் ரூமில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருப்பதை பார்த்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











