கல்யாண நாளில் கண்டம்.. காணாமல் போன கார்த்திக்.. கார்த்திகை தீபம் !
சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில், ரேவதியால் ஜெயிலுக்கு சென்ற நபர் ஜாமீனில் வெளியே வந்து விடுகிறான். இதையடுத்து, கார்த்திக் அந்த நபரை பார்க்க வேண்டும் என ஸ்டேஷனுக்கு வர அவரை இப்போது தான் பெயிலில் வெளியே எடுத்து கூட்டி சென்றதாக சொல்ல இப்படிப்பட்ட ஆட்களை எல்லாம் எப்படி வெளியே விடுறீங்க என கார்த்திக் கோபப்படுகிறான்.
அதைத்தொடர்ந்து கார்த்திக் மற்றும் ரேவதி கோவிலுக்கு வருகிறார்கள். கோவிலில் ஒரு புகழ் பெற்ற சித்தர் பலன் சொல்லிக் கொண்டிருக்க அவர் குறிப்பிட்ட சிலருக்கு தான் பலன் சொல்லுவார் என பேசிக் கொள்கின்றனர். ரேவதி மற்றும் கார்த்திக் அந்த வழியாக செல்ல சித்தர் ரேவதியை அழைத்து உங்க கல்யாண வாழ்க்கையில் பிரச்சனை இருக்கு கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகிவிடும் இந்த கோவிலை சுத்திட்டு வா என்று அனுப்பி வைக்கிறார்.

கார்த்திகை தீபம்: பிறகு கார்த்தி பெயரை சொல்லி கூப்பிட்டு உன் பொண்டாட்டிக்கு கண்டம் இருக்கு அது உங்களுடைய கல்யாண நாள் அன்னைக்கு பெரிய கண்டம் இருக்கு, அன்னைக்கு ஒரு நாள் அவள தனியா விடாத. அந்த ஒரு நாள தாண்டிட்டா உங்க வாழ்க்கையில எந்த பிரச்சனையும் இருக்காது என்று சொல்ல கார்த்திக் அதிர்ச்சியும் குழப்பமும் அடைகிறான். ஆனால் சித்தர் சொன்ன விஷயத்தை ரேவதியிடம் சொல்லாமல் மறைக்கிறான். இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த கார்த்திக் மயில்வாகனத்திடம் சித்தர் சொன்ன விஷயத்தை சொல்கிறான்.
ரேவதியை தேடும் கார்த்திக்: மறுநாள் நாளை வீட்டில் இல்லாததால் கார்த்திக் பல இடத்தில் அவளை தேடிக்கொண்டு இருக்க அப்போது ரோகிணி கார்த்திக்கிடம் அவள், பைக் ஷோ ரூம் போய் இருப்பாள் என்று சொல்கிறான். சித்தர் ரேவதிக்கு கண்டம் இருப்பதாக சொன்னதை நினைத்து வருத்தப்படுகிறான். இதையடுத்து, ரேவதியை தேடிச்செல்ல, அங்கு துணிக்கடையில் வேலை செய்த முருகன் ரேவதியை வழி மறித்து ரகளை செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











