நொடிப்பொழுதில் வந்த ஆபத்து.. உயிர் தப்பினாரா ரேவதி.‌. கார்த்தியால் நடந்தது என்ன? கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் சனிக்கிழமை எபிசோடில், மயில்வாகனம் ஓட்டலுக்கு சாமுண்டீஸ்வரி என பெயர் வைத்தை பார்த்து சந்தோஷப்படுகிறாள். ஆனால், சந்திரகலா இந்த ஒன்னுக்கும் உதவாதவனை பத்தி பேசியதால், இப்போ அவன் இந்த ஓட்டலுக்கு ஓனராகிவிட்டான் என்ற ஆத்திரத்திதோடு இருக்கிறார். ரேவதி பைக் ஷோ ரூமுக்கு சென்றுவிட, இங்கு கார்த்திக் பல இடத்தில் அவளை தேடிக்கொண்டு இருக்க அப்போது ரோகிணி கார்த்திக் ரேவதி பற்றி விசாரிக்கிறார்.

ரோகிணி, அவள், பைக் ஷோ ரூம் போய் இருப்பாள் என்று சொல்கிறான். சித்தர் ரேவதிக்கு கண்டம் இருப்பதாக சொன்னதை நினைத்து கார்த்திக், பதறியடிப, ரேவதியை தேடிச்செல்ல, அங்கு துணிக்கடையில் வேலை செய்த முருகன் ரேவதியை தீட்டுகட்டுவதற்கான சரியான நேரத்தை எதிர்பார்த்து துரத்தியபடி செல்கிறார்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், ரவுடிகள் ரேவதியை கத்தியால் குத்த போக கார்த்திக் ஃபோன் செய்ய ரேவதி கையில் இருந்த ஃபோன் தவறி கீழே விழுந்துவிடுகிறது. இதை எடுப்பதற்காக ரேவதி, கீழே குனிய கத்திக் குத்தில் இருந்து எஸ்கேப் ஆகிறாள். கார்த்திகை பார்த்த ரவுடிகள் இன்னைக்கு தப்பிச்சிட்டா, நாளைக்கு கொல்லாமல் விட மாட்டோம் என செல்கின்றனர்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

சந்திரகலா சதி: அடுத்த நாள் ரேவதி கார்த்தியை கட்டியணைத்து கேக் வெட்டி முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர். மேலும் இரண்டு பேரும் கோயிலுக்கு போகலாம் என்று சொல்ல கார்த்திக், இன்னைக்கு வேண்டாம் என்கிறார். இதைக்கேட்டு கோவப்படும் ரேவதி, கல்யாணம் நாள் அதுவுமா கோவிலுக்கு போகவில்லை எப்படி என்று ரேவதி தொடர்ந்து அடம்பிடிக்கிறாள். இதையடுத்து, கார்த்திக், நாம சேர்ந்து போன அத்தைக்குபிடிக்காது அதற்காகத்தான் சொன்னேன் என்று சொல்ல, என் வாழ்க்கையில் தலையிட அவங்க யாரு, நாம கோவிலுக்கு கட்டாயம் போக வேண்டும் என்கிறாள்.

ரேவதியை துரத்தும் முருகன்: இந்த நேரம் மீண்டும் ஷோ ரூமில் இருந்து ஃபோன் வர ரேவதி வெளியில் போய்விட்டு வருவதாக சொல்ல, கார்த்திக் எந்த வேலையாக இருந்தாலும், இன்னைக்கு நீ எங்கேயும் போகக்கூடாது என்று சொல்கிறான். ஆனால், ரேவதி ரோகிணியிடம் நான் கார்த்திக்கிற்கு தெரியாமல் ஷோ ரூம் போய்விட்டு வருகிறேன் என ஆட்டோவில் செல்கிறாள். ரேவதி எப்போது வருவாள் என எதிர்பார்த்துக்கொண்டு இருந்த முருகன் காரில் ஆட்டோவை பின் தொடர்ந்து செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X