கார்த்திக்கை ஏமாற்றிய ரேவதி.. வரப்போகும் ஆபத்து.. கார்த்திகை தீபம்!
சென்னை: ரேவதி கார்த்தியை கட்டியணைத்து கேக் வெட்டி முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர். மேலும் இரண்டு பேரும் கோயிலுக்கு போகலாம் என்று சொல்ல கார்த்திக், இன்னைக்கு வேண்டாம் என்கிறார். இதைக்கேட்டு கோவப்படும் ரேவதி, கல்யாணம் நாள் அதுவுமா கோவிலுக்கு போகவில்லை என்றால் எப்படி என்று ரேவதி தொடர்ந்து அடம்பிடிக்கிறாள். இதையடுத்து, கார்த்திக், நாம சேர்ந்து போனா அத்தைக்குபிடிக்காது அதற்காகத்தான் சொன்னேன் என்று சொல்ல, என் வாழ்க்கையில் தலையிட அவங்க யாரு, நாம கோவிலுக்கு கட்டாயம் போக வேண்டும் என்கிறாள்.
கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில்,மீண்டும் ஷோ ரூமில் இருந்து ஃபோன் வர ரேவதி வெளியில் போய்விட்டு வருவதாக சொல்ல, கார்த்திக் எந்த வேலையாக இருந்தாலும், இன்னைக்கு நீ எங்கேயும் போகக்கூடாது என்று சொல்கிறான். இதனால், எப்படியாவது ஷோ ரூமுக்கு போக வேண்டுமே எப்படி போவது என யோசிக்கும் ரேவதி, ஒரு பிளான் போடுகிறாள். அதாவது, தனது ரூமில் படுத்துஇருப்பது போல, தலையணையை வைத்து செட் செய்து வைத்துவிட்டுரோகிணியிடம் நான் கார்த்திக்கிற்கு தெரியாமல் ஷோ ரூம் போய்விட்டு வருகிறேன்.

பெரிய ஆபத்து: கல்யாண நாளுக்கு ஏதாவது ஒரு சர்ப்ரைஸ் கிஃப் கொடுக்கலாம் என்று பார்த்தா கார்த்திக் வெளியில் போகாதே என்று சொல்கிறார். நான் ரூமில் படுத்து இருப்பது போல செட் செய்து வைத்துவிட்டு செல்கிறேன். நீ கார்த்திக் வந்தா ரேவதி தூங்குறா என சொல்லு என்கிறாள். உடனே ரோகிணி, கார்த்திக் காரணமா இல்லாமல் வெளியில் போகதே என்று சொல்ல மாட்டாரு ரேவதி வேண்டாம் என்று சொல்ல, அக்கா, அரைமணி நேரத்தில் என்ன ஆகப்போகிறது. நான் ஆட்டோவில் போய்விட்டு வந்துவிடுகிறேன் என்கிறாள். இதையடுத்து, ஆட்டோவில் ஏற, வெளியில் காரில் காத்து இருக்கும் முருகன், அந்த ஆட்டோவை பின் தொடர்ந்து செல்கிறான். சரியான நேரத்தில் ஆட்டோவை அடித்து தூக்கிவிட்டு, விபத்து போல நாடகமாட திட்டம் போட்டு, ஆட்டோவை பின் தொடர்ந்து செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக என்ன நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











