உயிருக்கு போராடும் ரேவதி.. ஆச்சரியத்தில் ஆழ்த்திய கார்த்தியின் வார்த்தைகள்.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் சாமியார் சொன்னது போலவே ரேவதி விபத்தில் சிக்கி தலையில் அவளுக்கு பெரிய காயம் ஏற்படுகிறது. இதையடுத்து அவரை அங்கிருந்த பெண்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். ஆனால், ரேவதியின் கண் இமைகள் மூடாதபடி திறந்தே இருக்கிறது.
கார்த்திகை தீபம்: கார்த்திக் ரேவதியை தேடி வர அப்போது அங்கு ஒரு பெண்ணுக்கான ஆக்சிடென்ட் நடந்ததாக பேசிக் கொண்டிருக்க கார்த்திக் யாருக்கு என்னாச்சு என்று விசாரிக்கிறான். அப்போது ரேவதியின் ஃபோன் கீழே கிடைக்க பிறகு சந்தேகமடைந்து ரேவதியின் போட்டோவை காட்ட, அங்கிருந்தவர்கள் இந்த பொண்ணுக்கு ஆக்சிடென்ட் நடந்துச்சு, மண்டையில் அடிபட்டு ரத்தம் வெல்லத்தில் கிடந்தார்கள் என்று சொல்ல கார்த்திக் கதறி அழுகிறார். பிறகு எந்த ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் இருக்காங்க என்று விசாரித்து கார்த்தியும் மயில் வாகனமும் ஹாஸ்பிடலுக்கு செல்கின்றனர். ஹாஸ்பிடலில் ரேவதிக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்க ஆப்ரேஷன் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. ஆனால் ரேவதியின் இமைகள் மூடாமல் இருக்க ஆபரேஷன் செய்வதில் சிக்கல் உருவாகிறது.



Click it and Unblock the Notifications











