மூளையில் ரத்த கசிவு.. கார்த்தியிடம் கையெழுத்து வாங்கிய டாக்டர்.. கார்த்திகை தீபம்!

சென்னை: ரேவதிக்கு விபத்து நடந்த விஷயத்தை மயில்வாகனம் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனைக்கு ஓடி வருகின்றனர். ரோகிணி அய்யோ நான் விஷயம் தெரியாமல் அவளை வெளியில் அனுப்பிவிட்டேனே என பதறுகிறாள். மற்றொரு பக்கம் சாமுண்டீலஸ்வரி கதறி அழுகுகிறாள். இதையடுத்து, மருத்துவர் கண் திறந்தே இருப்பதால் ஆப்ரேஷன் செய்ய முடியாது என்று சொல்ல, குடும்பத்தினர் ஒவ்வொருத்தராக ரேவதியிடம் சென்று பேசி பார்க்க எந்த முன்னேற்றமும் இல்லை.

பிறகு இறுதியாக மயில்வாகனம் ராஜராஜனிடம் சகலையை பேச சொல்லுங்க மாமா. ரேவதி மனசு முழுக்க கார்த்திக் தான் இருக்கிறார் என்று சொல்ல, கார்த்திக் ரேவதியிடம் பேசுகிறான். ரேவதி உனக்கு ஒன்னும் இல்லம்மா, சின்ன அடி தான், சின்ன ஆப்ரேஷன் செய்யணும், ஆனால், உன் கண் இமை மூடாமல் இருப்பதால், ஆப்ரேஷன் செய்ய முடியவில்லை. கொஞ்சம் கண்ணை மூடுமா, உனக்கு ஒன்னும் ஆகாது நீயும், நானும் ரொம்ப நாள் சந்தோஷமாக இருப்போம் என்று கண்கலங்கி பேசுகிறான். இவை அனைத்தையும் கேட்டு ரேவதி கண் இமைகளை மூட டாக்டர்கள் ஆச்சரியம் அடைகிறார்கள். பிறகு ரேவதிக்கு முக்கியமான ஆபரேஷனுக்கான ஏற்பாடுகள் நடக்கிறது.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: அப்போது ரோகிணி, சாமுண்டீஸ்வரியிடம் பாத்தீங்களா, நாம எல்லாரும் ரேவதியிடம் பேசினோம். ஆனால், அவ கண்ணை மூடவே இல்லை. ஆனால், கார்த்திக் போனதும் கண்ணை மூடி இருக்கா... இப்போவாவது உங்களுக்கு புரிதா, இரண்டு பேரும் எவ்வளவு அன்பா, புரிதலுடன் இருக்காங்கனு, ஆனால், நீங்க அது தெரியாமல் இரண்டு பேரையும் பிரிக்க பாக்குறீங்க என்று சொல்ல சாமுண்டீஸ்வரி எதுவுமே பேசாமல் அமைதியாக நிற்கிறாள்.

மூலையில் ரத்த கசிவு: இதையடுத்து வரும் மருத்துவர், ரேவதியின் மூளையில் ரத்த கசிவு இருக்கிறது. அதோடு மட்டுமில்லாமல் முக்கியமான ஒரு எலும்பு உடைத்துவிட்டதால், இது பெரிய ஆப்ரேஷன். இதில், ரேவதி பிழைப்பதற்கு 50 சதவீதம் மட்டும் தான் வாய்ப்பு இருக்கு, நீங்க இந்த கடிதத்தில் கையெழுத்து போட்டால் மட்டும் தான் நான் ஆப்ரேஷனை ஆரம்பிக்க முடியும் என்று சொல்கிறார். இதைக்கேட்டு ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுழுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X