நகை பெட்டியில் கல்லு மணல்.. பஞ்சாயத்தில் காத்திருந்த அதிர்ச்சி.. கார்த்திகை தீபம்!
சென்னை: சந்திரகலாவின் திட்டத்தின் ராஜராஜன் மயங்கி விழ அவரை மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். இந்த விஷயம் தெரிந்து அனைவரும் மருத்துவமனைக்கு செல்கின்றனர். மருத்துவமனையில் ரேவதியிடம் கார்த்திக் நான் வீட்டுக்கு போறேன், வீட்டில் தங்கம் இருக்கு, அதே நேரம் மாமா திடீரென மயங்கி விருந்து இருக்கிறார். எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு நான் வீட்டுக்கு போகிறேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். இந்த சமயத்தில் வீட்டிற்குள் நுழையும் முத்துவேல் சந்திரகலாவின் உதவியுடன் புதையலாக கிடைத்த தங்க நகைகளை கடத்தி செல்கிறான்.
இன்றைய எபிசோடில், முத்துவேல் நகை திருடி கொண்டு போக காளியம்மா இதை வைத்து சாமுண்டீஸ்வரியை அவமானப்படுத்த திட்டமிடுகிறாள். அடுத்த நாள் காலையில் பஞ்சாயத்து கூடுகிறது. நகை பானை கொண்டுவரப்பட்டு அது அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் நேரத்தில் சிவனாண்டி, அந்த பானை திரண்டு காட்டுங்கள் அதில் என்ன இருக்கிறது என்று மக்கள் பாக்க வேண்டாமா என சொல்கிறான். அப்போது சாமுண்டீவரி நகை பத்திரமாகத்தான் இருக்கு என்று சொல்ல, ஊர்காரர் ஒருவர் எதுக்கும் பானையில் என்ன இருக்கிறது என்று ஊர் மக்களும் பாக்கட்டும் என சொல்கிறார்.

கார்த்திக் தீபம்: ஊர் மக்கள் முன் பானையை திறந்து பார் பெட்டியை திறந்து பார்க்க சொல்ல பெட்டியை திறந்து பார்க்க உள்ளே வெறும் கல்லும் மண்ணும் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். உடனே சாமுண்டீஸ்வரி எங்கேயோ தப்பு நடந்து இருக்கு என்று சொல்கிறாள். அப்போது சிவனாண்டி, அரசாங்கத்தில் ஒப்படைப்பதாக சொல்லிவிட்டு நகையை நீ வீட்டில் பதுங்கி வெச்சிட்டியா என சொல்கிறான். இவளுக்கும் இவ அம்மா மாதிரி நகையை திருடி புத்தி தான், இப்படி ஊர் மக்களை இவ ஏமாத்தி இருக்காங்க என பழி சுமத்துகின்றனர். இதைத்தொடர்ந்து கார்த்திக், சிவனாண்டியும் முத்துவேலும் பேசிக்கொள்ளும் வீடியோவை அனைவர் முன்பும் காட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











