கடவுள் செய்த சதி.. கார்த்தியை மறந்த ரேவதி.. சந்திரகலாவின் திட்டம்.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் மருத்துவர், ரேவதியின் மூளையில் ரத்த கசிவு இருக்கிறது. இது பெரிய ஆப்ரேஷன். இதில், ரேவதி பிழைப்பதற்கு 50 சதவீதம் மட்டும் தான் வாய்ப்பு இருக்கு, நீங்க இந்த கடிதத்தில் கையெழுத்து போட்டால் மட்டும் தான் நான் ஆப்ரேஷனை ஆரம்பிக்க முடியும் என்று சொல்கிறார். இதைக்கேட்டு ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுகின்றனர்.

இதனால் மன வேதனை அடையும் கார்த்திக், கோவிலில் ரேவதிக்கு பெரிய ஆபத்து வரும் என்று சொன்ன சாமியாரை சந்தித்து ரேவதிக்கு உயிருக்கு போராடும் விஷயத்தை சொல்லிகிறான். அப்போது, சாமியார் கடவுளின் செயலை யாராலும் தடுக்கவே முடியாது, இதில் ரேவதியின் உயிருக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை. ஆனால், உன் வாழ்க்கையில் பெரிய பிரச்சனை அவமானம் எல்லாம் நடக்கும் அதை நீ புரிந்து கொண்டு, ரேவதி கூடவே இருக்க வேண்டும், ரேவதியை விட்டு நீ பிரியக்கூடாது, அவள் உன் பார்வையிலேயே இருக்க வேண்டும் என சொல்கிறார். இதைக்கேட்டு வருத்தப்படும் கார்த்திக் எந்த சூழ்நிலை வந்தாலும் நான் ரேவதியை விட்டு கொடுக்க மாட்டேன் என சொல்கிறான்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: இதையடுத்து, கார்த்திக் மருத்துவமனைக்கு வர, மருத்துவர்கள் ரேவதிக்கு ஆப்ரேஷன் முடிந்துவிட்டது. ஆனால், நடந்த விபத்தால் அவரின் நினைவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் வாழ்க்கையில் கடந்த 3 ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை மறந்துவிட்டார் என சொல்கிறார். உடனே ரோகிணி, டாக்டரிடம் கடந்த வருஷம் தான் கல்யாணமே ஆச்சு, அது அவளுக்கு நினைவு இருக்குமா என்று கேட்க, அது நினைவு இருக்க வாய்ப்பு இல்லை என்கிறார்.

சந்திரகலா திட்டம்: அதாவது, டாக்டர் சொன்ன விஷயத்தை கேட்டு சந்திரகலா, அப்படி ஒரு விஷயம் நடந்தா அதை நமக்கு சாதகமாக பயன்படுத்தி கார்த்திக் ரேவதியை பிரித்து விடலாம் என திட்டம் போடுகிறாள். பிறகு ரேவதி கண் விழித்துவிட்டதாக மருத்துவர் சொல்ல, எல்லோரும் அவளைப் பார்ப்பதற்காக சென்று அவளை சுற்றி நிற்க கண் திறந்த ரேவதி எல்லோரையும் பார்த்து எந்த ஒரு சலனமும் இல்லாமல் இருக்கிறாள். சந்திரகலா நாம் எதிர்பார்த்த மாதிரி என்னமோ நடக்க போகுது என சந்தோஷம் கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X