வீட்டை விட்டு வெளியேறிய கார்த்திக்.. சந்திரகலாவின் திட்டம்.. கார்த்திகை தீபம்!

சென்னை: ரேவதிக்கு நடந்த ஆப்ரேஷனில் மூலையில் நினைவு மண்டலம் பாதிக்கப்பட்டுவிட்டது. இதனால், கடந்த 3 ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை மறந்துவிட்டார் என சொல்கிறார். உடனே ரோகிணி, டாக்டரிடம் கடந்த வருஷம் தான் கல்யாணமே ஆச்சு, அது அவளுக்கு நினைவு இருக்குமா என்று கேட்க, அது நினைவு இருக்க வாய்ப்பு இல்லை என்கிறனர்.

டாக்டர் சொன்ன விஷயத்தை கேட்டு சந்திரகலா, அப்படி ஒரு விஷயம் நடந்தா அதை நமக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு கார்த்திக் ரேவதியை பிரித்து விடலாம் என திட்டம் போடுகிறாள். பிறகு ரேவதி கண் விழித்துவிட்டதாக மருத்துவர் சொல்ல, எல்லோரும் அவளைப் பார்ப்பதற்காக சென்று அவளை சுற்றி நிற்க கண் திறந்த ரேவதி எல்லோரையும் பார்த்து எந்த ஒரு சலனமும் இல்லாமல் இருக்கிறாள். சந்திரகலா எதிர்பார்த்த மாதிரி, ரேவதிக்கு கார்த்திக்கை யார் என்று தெரியாமல் போகிறது. இதனால் கார்த்திக் மனமுடைந்து போக கார்த்திக் வருத்தப்படுகிறார்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: மேலும், பழைய விஷயங்களை நினைவுபடுத்த முயற்சி செய்தால் அது ரேவதி மூலையை பாதிக்கும் இதனால், கோமாவிற்கு சென்றுவிடுவார், அது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என டாக்டர் சொல்கிறார். இதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்த சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலா ரேவதிக்கு பழசு எதுவும் நினைவுக்கு வரக்கூடாது என்று சொல்லி கார்த்தியை வீட்டை விட்டு வெளியே துரத்துகின்றனர். வீட்டை விட்டு வெளியேறிய கார்த்திக் கோவிலுக்கு சென்று ரேவதிக்காக கடவுளிடம் வேண்டுகிறான்.

வெளியேறிய கார்த்திக்: இதனால் பதறிப்போன கார்த்திக்கை பார்க்க மயில்வாகனம் மற்றும் ராஜராஜன் கோவிலுக்கு வந்து, நீங்க மீண்டும் வீட்டுக்கு வரவேண்டும். மீண்டும் ரேவதிக்கு நினைவு வந்துவிட்டால், அவள் உங்களைத்தான் கேட்பா, அப்போ நாங்க என்ன பதில் சொல்லுவோம். சாமுண்டீவரியும், சந்திரகலாவும் உங்களிடம் இருந்து பிரிக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று சொல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X