கார்த்திக் மீது திருட்டு பழி.. கைது செய்யப்படும் ரேவதி.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில் புதையலுக்கு பதிலாக கல்லும் மண்ணும் இருந்த நிலையில் ஊர்காரர்கள் அனைவரும், இன்னும் இரண்டு நாளில் புதையல் கிடைக்கவில்லை என்றால் சரியான தண்டனை கிடைக்கும். உங்களின் பஞ்சாயத்து தலைவர் பதவி பறிக்கப்படும், கோவிலில் எந்த விசேஷம் நடந்தாலும் உங் குடும்பம் கலந்து கொள்ளக்கூடாது, உங்களை ஊரை விட்டே ஒதுக்கி வைத்துவிடுவோம் என சொல்கின்றனர். இதைக்கேட்டு ஆத்திரப்படும் சாமுண்டீஸ்வரி, நிறுத்துங்க என்ன பேசுறீங்க, நான் நகை பணத்திற்கு ஆசைப்படுபவளா, இந்த ஊர் மக்களுக்காக எவ்வளவு செய்து இருக்கிறேன். நீங்க இப்படி பேசுவது சரியில்லை, கோவில் நகையை நான் திருடி இருந்தால், அந்த ஆத்தாவே எனக்கு தண்டனை தரட்டும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு வருகிறார்.
வீட்டுக்கு வந்த சந்திரகலா பஞ்சாத்தில் நடந்த விஷயத்தை சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது மயில்வாகனம், அது எப்படி வீட்டில் இருக்கும் நகை காணாமல் போகும் என கேட்க, இதோ இந்த வீட்டில் தான் கார்த்திக் இருக்கானே அவன் தான், அக்காவை ஊர் முன்னாடி அவமானப்படுத்த வேண்டும் என இப்படி செய்து இருப்பான் என கார்த்திக் மீது பழி போடுகிறான். அப்போது, ராஜராஜன், மயில்வாகனம் ஆகியோர் கார்த்திக் இப்படி எல்லாம் செய்ய வாய்ப்பே இல்லை, அவரிடம் இல்லாத பணமா, நகையா எனவே சொல்கின்றனர். இதைக்கேட்டு மனம் வேதனையடைத்த கார்த்திக் எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

கார்த்திகை தீபம்: மாமா மருத்துவமனையில் இருக்கும் போது வீட்டில் யாருமே இல்லையே, புதையல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைத்துத்தான் நான் ரேவதியிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தேன். எனக்கு என்னமோ நீங்க தான் ஏதோ பிளான் பண்ணி பண்ணியிருக்கீங்க என சொல்ல, இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. அப்போது, ரேவதி, சித்தி தேவையில்லாமல் அவர் மேல பழியைப்போடாதீங்க, அவர் என்னிடம் சொல்லிவிட்டுத்தான் வீட்டுக்கு வந்தார். அவர் எதுக்கு நகை எடுக்க வேண்டும் என சொல்லி சண்டை போடுகிறாள்.
கைதாகும் ரேவதி: மறுபக்கம், சிவனாண்டி ஒருவனை ஏற்பாடு செய்து நகைகளை கார்த்திக் தான் கொடுத்தார் என்று ஊர் முன் சொல்லவைக்க திட்டம் போட்டு, அந்த ரௌடியை பிடித்து அடிப்பதுரு போல ஒரு நாடகத்தை நடத்துகிறான். அவன் கார்த்திக் தான் இப்படி செய்ய சொன்னதாக சொல்கிறான். அதோடு மட்டுமில்லாமல், சந்திரகலா வீடியோ ஆதாரம் ஒன்றை காட்ட, அதில் கார்த்தி இந்த ரவுடியிடம் பையை கொடுப்பது போல இருக்க ஊர்க்காரர்கள் அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு, அங்கு வந்த போலீஸ் புதையல் இருக்குன்னு சொன்னீங்க எங்கே என்று கேட்க சாமுண்டீஸ்வரி புதையலை காணவில்லை, வீட்டில் பாதுகாப்பாகத்தான் வைத்து இருந்தோம் எப்படியோ காணாமல் போய்விட்டது. எங்களுக்கு கார்த்தி மீது தன் சந்தேகமாக இருப்பதாக சொல்ல, அப்போது, ரேவதி அதை நான் புதையலை எடுத்தேன் என்று சொல்ல போலீஸ் அவளை கைது செய்கிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











