கார்த்தி நெற்றியில் துப்பாக்கியை வைத்த சாமுண்டீஸ்வரி.. சந்திரகலாவின் சூழ்ச்சி? கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் நேற்றை எபிசோடில், சாமுண்டீஸ்வரி தனது அம்மா போட்டோ முன்பு நின்று உனக்கு திருட்டு பட்டம் கட்டின மாதிரி எனக்கு திருட்டு பட்டம் கட்டிட்டாங்க.. என் பொண்ணு ரேவதியை வேற கைது பண்ணி கூட்டிட்டு போய்ட்டாங்க இது எல்லாத்துக்கும் காரணம் அந்த ராஜா சேதுபதியோட பேரன் தான். இப்போ எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல என கண் கலங்கி அழுகிறாள். அதை தொடர்ந்து கார்த்திக், ரேவதியை திரும்பி காவல்நிலையத்தில சந்தித்து நீ எதுக்கு இப்படி பண்ண நான் பாத்துக்குறேன்னு சொன்னேன்ல என்று கேட்க நீங்க வெளியே இருந்தா தான் உண்மையை கண்டுபிடித்து அம்மாவை காப்பாற்ற முடியும் அதனாலதான் இப்படி செய்தேன் என ரேவதி சொல்கிறாள். பிறகு கார்த்திக் கவலப்படாத கூடிய சீக்கிரம் உண்மையை கண்டுபிடித்து உன்னை வெளியே கொண்டு வருவேன் என வாக்கு கொடுக்கிறான்.

கார்த்திகை தீபம்: அதன் பிறகு சாமுண்டீஸ்வரியிடம் பேப்பரில் வந்த செய்திகளை காட்ட, சாமுண்டீஸ்வரி கோபப்படுகிறாள். இது எல்லாத்துக்கும் காரணம் கார்த்திக் தான். அவன் தான் என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்டான். எல்லாத்தையும் நான் தாங்கிக்கொள்வேன். ஆனால்,திருடிபட்டத்தை மட்டும் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது என்று கண்கலங்குகிறாள். என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய கார்த்தை சுட்டுத்தள்ளுவதற்காக துப்பாக்கியை எடுக்கிறாள்.
துப்பாக்கியை கையில் எடுத்த சாமுண்டீஸ்வரி: இதையடுத்து, கார்த்திக்கும் சாமுண்டீஸ்வரிக்கும் இடையே வாக்குவாதம் உருவாக சாமுண்டீஸ்வரி துப்பாக்கியை எடுத்து கார்த்திகை நெற்றியில் வைக்க கார்த்திக், அத்தை கொஞ்சம் அமைதியா இருங்க, இதில் ஏதோ தப்பு இருக்கு, எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. இந்த வேலையை செய்தது யார் என்று எனக்கு தெரியும், அத நான் கண்டுபிடிக்கிறேன் என்று சொல்ல சாமுண்டீஸ்வரி அதை ஏற்க மறுத்து, கார்த்திகை நோக்கி சுடும் நேரத்தில், ராஜராஜன் தடுத்து, சாமுண்டீஸ்வரி சமாதானம் செய்து துப்பாக்கியை கீழே போட சொல்கிறார். இதைத்தொடர்ந்து, ரோகினி ரேவதியை சந்தித்து வீட்டில் நடந்த விஷயங்களை சொல்ல, ரேவதி வருத்தப்படுகிறாள், எல்லாத்துக்கும் காரணம் சித்தி தான் ஆனால், அம்மாவிற்கு இது புரியவே இல்லை. கார்த்திக் கூடிய சீக்கிரம் என்ன வெளியில் எடுத்து விடுவாரு என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











