ரேவதியை வெளியே கொண்டு வரும் கார்த்திக்.. ரவுடி சிக்கியது எப்படி? கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திக்கும் சாமுண்டீஸ்வரிக்கும் இடையே வாக்குவாதம் உருவாக சாமுண்டீஸ்வரி துப்பாக்கியை எடுத்து கார்த்திகை நெற்றியில் வைக்க கார்த்திக், அத்தை கொஞ்சம் அமைதியா இருங்க, இதில் ஏதோ தப்பு இருக்கு, எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வேலையை செய்தது யார் என்று எனக்கு தெரியும், அத நான் கண்டுபிடிக்கிறேன் என்று சொல்ல சாமுண்டீஸ்வரி அதை ஏற்க மறுத்து, கார்த்திகை நோக்கி சுடும் நேரத்தில், ராஜராஜன் தடுத்து, சாமுண்டீஸ்வரி சமாதானம் செய்து துப்பாக்கியை கீழே போட சொல்கிறார்.
இதைத்தொடர்ந்து, ரோகினி ரேவதியை சந்தித்து வீட்டில் நடந்த விஷயங்களை சொல்ல, வருத்தப்படும் ரேவதி,நான் கனவில் கண்டது போலவே நடந்து விட்டது என்று சொல்லி வருத்தப்படுகிறாள். இது எல்லாத்துக்கும் காரணம் சித்தி தான். ஆனால், அம்மாவிற்கு இது புரியவே இல்லை. கார்த்திக் கூடிய சீக்கிரம் என்னை வெளியில் எடுத்து விடுவாரு என்று சொல்கிறாள். மறுபக்கம் அபிராமியின் நினைவிடத்தில் ஒரு ரௌவுடி ஒருவன் அந்த நகைகளை புதைத்து வைக்கிறார்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், அபிராமி நினைவிடத்திற்கு வரும் கார்த்திக், அம்மாவை நினைத்து வருத்தப்படுகிறான். இரண்டு குடும்பமும் ஒன்றாக சேர வேண்டும் என்பதற்காகத்தான் நீங்க இறந்ததே, அப்படி இருக்கும் போது இப்படி ஆகிவிட்டதே என வருத்தப்படுகிறான். அப்போது தான் அங்கு, இன்சுலின் பாட்டில் ஒன்று கிடைக்கிறது. அந்த பாட்டிலை எடுத்து,மெடிக்கல் ஷாப்பிங் காண்பித்து இதை வாங்கியது யார் என்ற தகவலை கண்டு பிடிக்கிறான். அதன் பிறகு அந்த ரவுடி இருக்கும் இடத்திற்கு சென்று அவனை மடக்கி பிடிக்க முயற்சி செய்ய உண்மை தெரிந்த ரவுடி கார்த்தியின் பிரிவிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறான்.
நகையை ஒப்படைத்த கார்த்தி: ஓடும்போது விபத்தில் சிக்கி மயங்கி விட கார்த்திக் அவனை ஹாஸ்பிடலில் அனுமதிக்கிறான். பிறகு அவனிடம் இருந்து கைப்பற்றிய நகைகளை பஞ்சாயத்தில் கொண்டு வந்து ஊர்காரர்களிடம் ஒப்படைக்கிறான். நகை கடை வைத்து விட்ட காரணத்தால் கார்த்திக் ரேவதியை வெளியே விட சொல்ல இன்னும் நகை திருடியது யார் என்பது தெரியவில்லை என்பதால் ரேவதியை நிபந்தனையில் வெளியே அனுப்புகின்றனர். பிறகு கார்த்திக் ரேவதி வீட்டுக்கு வர சாமுண்டீஸ்வரி இனிமே இந்த வீட்டுக்குள்ளே வரக்கூடாது என கார்த்திகை தடுத்து நிறுத்துகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











