கணவருக்காக போராட்டத்தில் இறங்கிய ரேவதி.. அனல் பறக்கும் அதிரடி கதைக்களம்.. கார்த்திகை தீபம்!

சென்னை: புதையலாக கிடைத்த நகைகளை பஞ்சாயத்தில் கொண்டு வந்து ஊர்காரர்களிடம் ஒப்படைக்கிறான் கார்த்திக். நகை கிடைத்து வைத்து விட்ட காரணத்தால் கார்த்திக் ரேவதியை வெளியே விட சொல்ல இன்னும் நகை திருடியது யார் என்பது தெரியவில்லை என்பதால் ரேவதியை நிபந்தனையில் வெளியே அனுப்புகின்றனர். பிறகு கார்த்திக் ரேவதி வீட்டுக்கு வர சாமுண்டீஸ்வரி இனிமே இந்த வீட்டுக்குள்ளே வரக்கூடாது என கார்த்திகை தடுத்து நிறுத்துகிறாள்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரி கார்த்திக் வீட்டுக்குள் வரக்கூடாது என்று சொல்ல ரேவதி என் புருஷன் வராமல் இதை வீட்டுக்குள்ள வரமாட்டேன் அவரை வீட்டுக்குள் கூப்பிடுகிற வரைக்கும் நான் வீட்டு வாசல்லதான் உட்கார்ந்து சோறு தண்ணி இல்லாம தர்ம போராட்டத்தின் ஈடுபடுவேன் என சொல்லி அப்படியே அமருகிறாள். இந்த சமயத்தில் சந்திரகலாவுக்கு மகளிரணி சங்கத்தில் இருந்து ஃபோன் வருகிறது. அதில், சாமுண்டீஸ்வரிக்கு விருது கொடுக்க இருப்பதாகவும் அவரை அழைப்பதற்காக நேரில் வரலாமா என்று கேட்கின்றனர். இது குறித்து சந்திரகலா சாமுண்டீஸ்வரியிடம் சொல்ல சாமுண்டீஸ்வரி அவர்களை வர சொல்லு என்று சொல்கிறாள். ரேவதி இப்போ தர்ணா போராட்டத்தில் ஈடுபடும் போது மீடியா இங்கே வந்தா சரியா இருக்காது என்று சொல்ல சாமுண்டீஸ்வரி வரட்டும் பாத்துக்கலாம் என்று சொல்கிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

சன்டே ஸ்பெஷல்: மேலும் கார்த்திகை தீபம் இந்த வாரம் சன்டே ஸ்பெஷல் எபிசோட் வரும் ஞாயிறு மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த சண்டே ஸ்பெஷல் எபிசோடில் சாமுண்டீஸ்வரி விருது விழாவிற்கு செல்ல முடிவெடுக்கிறாள். மேலும் இந்த விருது விழாவில் விருது வாங்கி கார்த்தியை விட பெரிய ஆள் என நிரூபிக்க வேண்டும் என திட்டமிடுகிறாள். இந்த நிலையில் இந்த விருது விழாவில் சாமுண்டீஸ்வரிக்கு விருது வழங்கும் சிறப்பு விருந்தினராக கார்த்தியை வரவேற்கின்றனர். இப்படியான நிலையின் அடுத்த நடக்கப் போவது என்ன? சந்திர கலாவின் சூழ்ச்சி ஒரு பக்கம் சாமுண்டீஸ்வரியின் திட்டம் ஒரு பக்கம் என பரபரப்பான திருப்பங்களுடன் சண்டே ஸ்பெஷல் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. எனவே சண்டே ஸ்பெஷல் எபிசோடை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X