சம்பவம் செய்த கார்த்திக்.. தலைகுனிந்து நின்ற சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம் ஸ்பெஷல் எபிசோட்!
சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில், திருடப்பட்ட புதையலை கார்த்திக் பஞ்சாயத்தில் கொடுத்துவிட்டு, ரேவதியை வீட்டுக்கு அழைத்து வருகிறார். அப்போது சாமுண்டீஸ்வரி, இவன் வீட்டிற்குள் வந்தா சுட்டுவிடுவேன். இவனே நகையை திருடிவிட்டு, இப்போ நகை கிடைத்துவிட்டது என நாடகமாடுகிறான். இப்படிப்பட்டந்த அயோக்கியன் இந்த வீட்டிற்குள் வரவே கூடாது என சொல்கிறாள்.
இதனால், கோவப்படும் ரேவதி,யாரை பார்த்து என்ன சொல்றம்மா, அவர் என் புருஷன், அவர் வீட்டிற்குள் வரக்கூடாது என்று சொன்னால் எப்படி. இந்த புதையல் விஷயத்தில் ஏதோ தப்பு நடந்து இருக்கு, அதை யார் செய்தது என்பதை என் புருஷன் கண்டுபிடிப்பார் என சொல்கிறார். அப்போதும், சாமுண்டீஸ்வரி, கார்த்திக்கை திட்டியதால், ஆத்திரப்படும் ரேவதி, என் புருஷன் யார், புதையலை திருடியது என்பதை நிரூபித்ததும் நான் வீட்டிற்குள் வருகிறேன் என வீட்டு வாசலில் தர்ணா செய்கிறாள்.

கார்த்திகை தீபம்: மறுபக்கம் வீட்டிற்கு வரும் மகளிர் குழுவினர், பெண்கள் தினத்தை முன்னிட்டு, சாமுண்டீஸ்வரிக்கு சிறந்த பெண்மணி விருதை கொடுக்கப் போவதாக சொல்கின்றனர். அப்போது சாமுண்டீஸ்வரி, நான் இந்த விருதை, மனதார ஏற்றுக்கொள்கிறேன். அதேபோல உங்கள் தொண்டு நிறுவனத்தின் மூலமாக 500 பெண்களுக்கு லேப் டாப்பை பரிசாக அளிக்கிறேன் என சொல்கிறாள். அதேநேரம், மயில்வாகனத்தை சந்திக்கும் கார்த்திக், அத்தைக்கு விருது கொடுக்கும் சீப் கெஸ்ட் நான் தான். இது தெரியாமலேயே அதை அந்த விழாவில் கலந்து கொள்வதாக சொல்லி இருக்கிறார்கள். இந்த விஷயம் மட்டும் அத்தைக்கு தெரிந்தால் நிச்சயமாக அந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்கிறார். உடனே மயில்வாகனம், ஆமாம் நீ விருது கொடுப்பதாக இருந்தால் நிச்சயமாக அத்தை விழாவிற்கு வரமாட்டார்கள் அதனால் இது அத்தைக்கு தெரியாதபடியே பார்த்துக் கொள்வோம் என்கிறார்.
கார்த்திக் மாஸ் என்ட்ரி: விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்க, சந்திரகலா, சாமுண்டீஸ்வரி இருவருமே விழாவிற்கு வருகின்றனர்.அப்போது அங்கு, மாஸாக என்ட்ரி கொடுக்கிறார் கார்த்திக். இதை பார்த்து சாமுண்டீஸ்வரி அதிர்ச்சி அடைந்து என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறாள். அந்த விழாவில், பெண் ஒருவர், கார்த்திக்கை புகழ்ந்து பேச சாமுண்டீஸ்வரி ஆத்திரமாடுகிறாள். இதையடுத்து, கார்த்திக் கையால் சாமுண்டீஸ்வரி விருதை வாங்குகிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











