சாமுண்டீஸ்வரியை கலாய்த்து விட்ட ரேவதி.. நடந்தது என்ன? கார்த்திகை தீபம்!
சென்னை: மகளிர் குழுவினர், பெண்கள் தினத்தை முன்னிட்டு, சாமுண்டீஸ்வரிக்கு சிறந்த பெண்மணி விருதை கொடுக்கப் போவதாக சொல்கின்றனர். அப்போது சாமுண்டீஸ்வரி, நான் இந்த விருதை, மனதார ஏற்றுக்கொள்கிறேன். அதேபோல உங்கள் தொண்டு நிறுவனத்தின் மூலமாக 500 பெண்களுக்கு லேப் டாப்பை பரிசாக கொடுப்பதாக சொல்கிறாள். இதை கெடுக்க வேண்டும் என நினைத்த சந்திரகலா, சிவணான்டியிடம், அந்த வண்டியை கடத்தும்படி சொல்கிறாள். அதை தெரிந்து கொண்ட கார்த்தி எப்படியோ முயற்சி செய்து லேப் டாப் வண்டியை விழா நடைபெறும் இடத்திற்கு அனுப்பி வைக்கிறார்.
மறுபக்கம், சந்திரகலா, சாமுண்டீஸ்வரி இருவருமே விழாவிற்கு வருகின்றனர். விழாவில் அனைத்து பெண்களுக்கும் லேப் டாப், ஆட்டோ என அனைத்தையும் பெண்களுக்கு பரிசாக கொடுக்கிறார். அப்போது மாஸாக கார்த்திக் என்ட்ரி கொடுக்கிறார். இதை பார்த்து சாமுண்டீஸ்வரி அதிர்ச்சி அடைந்து இவன் தான் விருது கொடுக்கப்போகிறானா என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறாள். அந்த விழாவில், பெண் ஒருவர், கார்த்திக்கை புகழ்ந்து பேச சாமுண்டீஸ்வரி ஆத்திரமாடுகிறாள். இதையடுத்து, கார்த்தியின் கையால் சாமுண்டீஸ்வரி விருதை வாங்குகிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரி கார்த்தி கையால் விருது வாங்கிய கடுப்பில் வீட்டுக்கு வர, தர்ணா போராட்டத்தில் இருக்கும் ரேவதி, வாசலில் இருந்தபடியே என்னமா போகும்போது சந்தோஷமா போனீங்க, இப்போ சோகமா வரீங்க என்ன ஆச்சு என்று கேட்கிறாள். சாமுண்டீஸ்வரி அங்க என்ன நடந்துச்சுனு? சிறப்பு விருந்தினராக வந்தது யார் என்று உனக்கு தெரியாதா? என்று கேட்க தெரியும்மா, என் புருஷன் கார்த்தி கையால தான் விருது வாங்கினீங்கனு எனக்கு நல்லா தெரியும் என சொல்கிறாள். இதனால், கடுப்பான சந்திரகலா எல்லாம் தெரிஞ்சும் எதுக்கு இதைப்பத்தி கேட்கிற என கோபப்படுகிறாள்.
அவரு என் புருஷன்: அப்போது, ரேவதி என் புருஷன் உங்கள பத்தி பெருமையா தானே பேசினாரு, உங்களுக்கு சப்போர்ட் பண்ணி தான் பேசினாரு, ஆனா நீங்க தான் அவரை இப்போ வரைக்கும் புரிஞ்சுக்கவே இல்ல என சொல்கிறாள். இதைக்கேட்டு கடுப்பான சாமுண்டீஸ்வரி கோவமாக உள்ளே சென்று விடுகிறாள். இதைத்தொடர்ந்து முத்துவேல் ஒயின் ஷாப்பில் சரக்கு அடித்து கொண்டிருக்க கார்த்திக் ரவுடி போல் ஃபோன் செய்து நூறு சவரன் நகை என்னிடம் இருக்கு அதை விற்பதற்கு உதவி பண்ணுங்க குடும்பத்துல ரொம்ப கஷ்டமா இருக்கு என்று சொல்ல. அதை முத்துவேலும் நம்புகிறான். பின் முத்துவேல் இந்த விஷயத்தை சந்திரகலாவுக்கு தெரியப்படுத்துகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











