மருது ரேவதிக்கு திருமணம்.. சந்திரகலாவின் சூழ்ச்சி.. கார்த்திகை தீபம்!

சென்னை: நிச்சயதார்த்தத்தில் ரேவதிக்கு கார்த்திக் மோதிரம் போட்டுவிட்டதால் ஆத்திரத்தில் இருக்கும் சாமுண்டீஸ்வரி, நிலா பூஜைக்கான ஏற்பாடுகளை செய்கிறாள். பின் வீட்டில் இருக்கும் அனைவரும் ரேவதி உங்களை தான் பார்க்கணும், அதுக்கு தான் நாங்க ஆசைப்படுறோம் என்று சொல்ல கார்த்திக் நிலா பங்ஷனுக்கு வருகிறான். பின் மயில்வாகனம் மருதுவை திசை திருப்பி அவனது ஷூவுக்குள் கட்டெறும்பை போட்டு விட ரேவதி சல்லடையில் நிலவை பார்த்து விட்டு மருதுவை பார்க்க திரும்பும் போது மருது எறும்பு கடிக்க தாங்க முடியாமல் கீழே குனிய ரேவதி மருதுவுக்கு பின் நின்று கொண்டிருந்த கார்த்தியை பார்க்கிறாள். கார்த்தியின் முகத்தை பார்த்து மகிழ்ச்சியில் அப்படியே உறைந்து போகிறாள் ரேவதி. சாமுண்டீஸ்வரி பார்த்து கடுப்பாக வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் சந்தோசப்படுகின்றனர்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில் கார்த்திக் ரேவதி இருவருமே, காரில் சென்று கொண்டிருக்க. அப்போது கார்த்தியின் கையில் இருக்கும மோதிரத்தை பார்க்கும் ரேவதி, இது நம்முடைய நிச்சயதார்த்த மோதிரம் தானே இவருடைய கையில் எப்படி வந்தது? அப்படி என்றால் இவருக்கு தான், நான் மோதிரம் போட்டு விட்டேனா? இவருக்கும் எனக்கும் தான் நிச்சயதார்த்தம் நடந்ததா? என யோசிக்கிறாள். அதே நேரம், இதை எப்படி கார்த்திக்கிடம் கேட்கிறது என யோசித்து கொண்டு கேட்கிறார். அப்போது கார்த்தி என்ன ரேவதி யோசிக்கிறீங்க என கேட்க, வேறு ஏதோ சொல்லி சமாளிக்கிறாள் ரேவதி.

மாலைக்குள் தாலி: மறுபக்கம் வீட்டில் நீண்ட நாட்களாக கோவிலுக்கு சென்று இருந்த சந்திரகலா வீட்டிற்கு வந்துள்ளார். அவரிடம் சாமுண்டீஸ்வரி, மருதுக்கும் ரேவதிக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்ததாகவும் ஆனால், அது எல்லாத்தையும் கார்த்திக் முறியடித்துவிட்டதாக சொல்கிறார். இதைத் தொடர்ந்து சந்திரகலா வேறு ஒரு திட்டத்தை சொல்கிறார். அதாவது மாலை மாற்றும் சடங்குக்கு ஏற்பாடு செய்வோம். அப்போது ரத்த சொந்தத்தினர் மாலையிடக்கூடாது என சொல்லி மருதுவை மாலை போட சொல்வோம். அந்த மாலையில் தாலியை மறைத்து ரேவதிக்கும் மருதுக்கும் திருமணத்தை செய்து வைக்கலாம் என திட்டத்தை போடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X