ரேவதிக்கு ரகசிய திருமணம்?.. கள்ள நோட்டு டிராமா.. கார்த்திக்குக்கு வந்த சந்தேகம்.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடு சாமுண்டீஸ்வரி ரேவதிக்கும் மருதுக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்கிறார். அதற்காக யாருக்கும் தெரியாதபடி மாலைக்குள் தாலியை மறைத்து வைத்த அதையும் மருதுவை வைத்து போட வைத்துவிட்டால் ரேவதிக்கும் மருதுக்கும் திருமணம் நடந்து விடும் என்ற திட்டத்தை போட்டு மாலைக்குள் தாலியை மறைத்து வைக்கிறாள். அதே நேரம் கார்த்திக் இந்த விஷயம் தெரிந்து வந்து விடக்கூடாது என்பதற்காக பிரியாவிடம் கள்ள நோட்டுகளை கொடுத்து அதை அலுவலகத்தில் வைக்கும்படி சொல்கிறார். பிரியாவும், அந்த கள்ள நோட்டுக்களை ஆபிஸ் கப்போர்ட்டுக்குள் வைக்கிறாள்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில் ஒன்றாக ஆபிசுக்கு வரும் கார்த்திக், ரேவதியை பார்த்து பிரியா ஆத்திரப்படுகிறாள். அதே நேரம், கார்த்திக் ரேவதியை அழைத்து ஒரு பைலை கொடுக்கிறான், மேலும், இப்போவே பைலை ஓபன் பண்ணி பார்த்துக்கோங்க. அப்புறம் லெட்டர் இருக்குனு திட்ட கூடாது என்று கலாய்க்க ரேவதி பழைசை மனசுல வச்சிட்டு கலாய்க்காதீங்க சார் என்று சொல்கிறாள். அடுத்து ரேவதி வேலை விஷயமாக கப்போர்டை திறந்து பார்க்க உள்ளே பிரியா வைத்த பணக்கட்டுகள் இருக்க ஏதோ தப்பா இருக்கு என்று சந்தேகம் அடைகிறாள்.

சோதனை செய்த போலீசார்: பின் பிரியா, சாமுண்டீஸ்வரிக்கு ஃபோன் செய்து கார்த்திக் வந்துவிட்ட விஷயத்தை சொல்ல, சந்திரகலா போலீசுக்கு ஃபோன் செய்து, கார்த்தியின் ஆபிசில் கட்டுக்கட்டாக கள்ள நோட்டு இருக்கிறது. இதுதான் அவர்களின் பிஸ்னஸ் என சொல்கிறார். கொஞ்ச நேரத்தில் போலீசார், வருமானவரித்துறையினருடன் சோதனையிட வருகை தர ரேவதிக்கு பணம் நினைவுக்கு வந்து அதை எடுத்து மறைத்து வைக்கிறாள். பிறகு சோதனையிட்ட வருமானவரித்துறையினர் தவறான தகவல் கிடைத்ததாக சொல்லி கிளம்பி செல்கின்றனர். பிரியா இந்த விஷயத்தை சாமுண்டீஸ்வரிக்கு சொல்ல கடுப்பாகிறாள்.

zee tamil Karthigai Deepam

சந்தேகப்படும் கார்த்திக்: இதையடுத்து, சாமுண்டீஸ்வரி ரேவதிக்கு போன் செய்து மாலை பூஜை செய்ய வேண்டும் கோவிலுக்கு வா என்று சொல்கிறார். இதனால், ரேவதி எம்டியிடம் சென்று பர்மிஷன் கேட்க கார்த்திக் என்ன விஷயம் என்று கேட்க, அப்போது ரேவதி என் திருமணத்தில் ஏதோ பிரச்சனை இருப்பதால், மாலை பூஜை செய்ய வேண்டுமாம், அந்த மாலையை ரத்த சொந்தம் இல்லாத ஒருவர் கழுத்தில் போட வேண்டுமாம் இந்த பூஜையை செய்யத்தான் அம்மா கோவிலுக்கு வர சொல்கிறார்கள், இதில் எனக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் அம்மா நம்புகிறார்கள் என்று சொல்கிறார். இதைக்கேட்டு, கார்த்திக் இதில் நிச்சயமாக ஏதோ ஒரு திட்டம் இருக்கு என கார்த்தி யோசித்துக்கொண்டு இருக்கிறார்.

மறுபக்கம் வீட்டில் சாமுண்டீஸ்வரி தாலியை மறைத்து வைத்து இருக்கும் மாலையை எடுத்து கொண்டு கோவிலுக்கு கிளம்புகிறார். ரேவதி நேராக கோவிலுக்கு வந்துவிடுவாள், நாம இப்போது கிளம்பினால் சரியாக இருக்கும் என சொல்லி அனைவரையும் கிளம்ப சொல்கிறாள். ஆனால், வீட்டில் மயில்வாகனம், ராஜராஜன் அனைவரும் எதற்கு இந்த பூஜை என்று தெரியாமல் குழப்பத்துடன் கோவிலுக்கு செல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X