ரேவதி கழுத்தில் தாலி கட்ட ரெடியான மருது.. காதலை சொன்ன கார்த்திக்.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில், நீண்ட நாட்களாக கோவிலுக்கு சென்று இருந்த சந்திரகலா வீட்டிற்கு வந்துள்ளார். அவரிடம் சாமுண்டீஸ்வரி, மருதுக்கும் ரேவதிக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்ததாகவும் ஆனால், அது எல்லாத்தையும் கார்த்திக் முறியடித்துவிட்டதாக சொல்கிறார். இதைத் தொடர்ந்து சந்திரகலா வேறு ஒரு திட்டத்தை சொல்கிறார். அதாவது மாலை மாற்றும் சடங்குக்கு ஏற்பாடு செய்வோம். அப்போது ரத்த சொந்தத்தினர் மாலையிடக்கூடாது என சொல்லி மருதுவை மாலை போட சொல்வோம். அந்த மாலையில் தாலியை மறைத்து ரேவதிக்கும் மருதுக்கும் திருமணத்தை செய்து வைக்கலாம் என திட்டத்தை போடுகின்றனர்.
இதையடுத்து சாமுண்டீஸ்வரி தாலி வாங்குவதற்காக நகை கடைக்கு வருகிறார். கடையில் தாலி டிசைனை காட்டி இதுபோல வேண்டும் என கேட்கிறார். இதுபோல தாலி வேண்டும் என்று சொன்னால் இதே மாதிரி கிடைக்கும் ஆனால் இரண்டு மூன்று நாட்களாகும் என்று சொல்ல சாமுண்டீஸ்வரி ஷாக் ஆகிறாள். பிறகு அவ்வளவு நாள் காத்திருக்க முடியாது உடனடியாக வேண்டும் என்று சொல்லி ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்கிறாள்.

கார்த்திகை தீபம்: மறுபக்கம் கார்த்திக் மற்றும் ரேவதி ஒன்றாக காரில் வந்து கொண்டிருக்க அந்த வழியாக வந்த மயில்வாகனம் இவர்கள் இருவரும் ஜோடியாக வருவதை பார்த்துவிட்டு சரி நீங்க போங்க நான் போகிறேன் என சொல்லிவிட்டு சொல்கிறார். பிறகு ரேவதி நாம ரெண்டு பேரும் இப்படி ஒன்னா இருக்குறத ஆபீஸ்ல இருப்பார்கள் பார்த்த தப்பா பேச வாய்ப்பிருக்கு என்று சொல்கிறார். அப்போது கார்த்திக் யாராச்சும் ஏதாச்சு பேசிட்டு போறாங்க.. அதுக்கெல்லாம் கவலை பட கூடாது, யாராச்சும் ஏதாச்சும் கேட்டா காதலிப்பதாக சொல்லுங்க என்று சொல்ல ரேவதி ஷாக்காகிறாள். பிறகு ரேவதி என்ன சொல்றீங்க என்று திரும்ப கேட்க கார்த்திக் சரி நான் சொன்னதை மறந்துடுங்க என்று சொல்லி சமாளிக்கிறான். இதை தொடர்ந்து இருவரும் ஜோடியாக ஆபீசுக்கு வர செக்யூரிட்டி ஒரு மாதிரி பார்க்க ரேவதி இதுக்கு தான் ஒன்னா வர வேண்டாம் என்று சொன்னதாக சொல்கிறாள்.
மறுபக்கம் வீட்டில் சாமுண்டீஸ்வரி மாலையுடன் தாலியை சேர்த்து வைத்து ரேவதி கழுத்தில் மருது கையால் போட்டுவிட ஏற்பாடு செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications