ரகசிய திருமண ப்ளான் ஃப்ளாப்.. ரேவதி கழுத்தில் மாலை போட்ட கார்த்திக்.. கார்த்திகை தீபம்!

சென்னை: ரேவதி கார்த்தியிடம் பேசிவிட்டு வெளியில் வரும் போது கதவில் இடித்து கொண்டு ரத்தம் வர கார்த்திக் ஓடி போய் அவளது காலை எடுத்து வைத்து கட்டு போட்டு விட அனைவரும் இதை பார்க்கின்றனர். அடுத்து ரேவதி அம்மா பூஜை விஷயமாக வர சொல்லி இருப்பதாக சொல்லி கிளம்பி செல்கிறாள். ஆனால் கார்த்திக் சந்தேகமடைந்து வெளியே சென்று நகை கடை ஒன்றில் சாமுண்டீஸ்வரி போட்டோவை காட்டி விசாரிக்க தாலி வாங்கியது தெரியவருகிறது. பின் இளையராஜா சாமுண்டீஸ்வரி, சந்திரகலா மாலை வாங்கிய விஷயத்தை போனில் சொல்ல கார்த்தி அதிர்ச்சி அடைகிறான்.

பின் கார்த்திக் மயில்வாகனத்திற்கு போன் செய்து நான் சொல்ற மாதிரி செய்யுங்க என்று சொல்கிறான், மேலும் சந்திரகலா மருதுவை அழைத்து மாலையில் தாலி இருக்கும் விஷயத்தை சொல்கிறாள். இதை எப்படியாவது ரேவதி கழுத்தில் போட்டுட்டா உங்களுக்கு ரகசிய திருமணம் ஆகிரும் என்று சொல்கிறாள். சாமுண்டீஸ்வரி என் பொண்ணுக்கு எப்படி எல்லாம் கல்யாணம் பண்ண ஆசைப்பட்டேன், ஆனால் இப்போ இப்படி நடக்கபோகுது, சரி நடக்கட்டும் என்று சொல்ல மருது மற்றும் ரேவதியை அழைத்து உட்கார வைக்கின்றனர்.

zee tamil Karthigai Deepam

மாலையை போட்ட கார்த்திக்: மருது ரேவதி கழுத்தில் மாலையிட போகும் சமயத்தில் அவனுக்கு தலையில் காக்கா எச்சமிடுகிறது. இதனால் சாமியார் அபச குணம் என்று சொல்லி தலைக்கு குளித்துவிட்டு வர சொல்ல மருது அங்கிருந்து எழுந்து செல்கிறான். பிறகு மருதுவின் முகத்தை மூடி தலையில் தாக்கி அவனை கட்டிப்போட்டு முகத்தை மறைத்து பிச்சைக்காரர்கள் வரிசையில் உட்கார வைக்கின்றனர். சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திராகலா மருதுவை காணவில்லை என தேடச் செல்ல அதற்கிடையில் கார்த்திக் அதே கோவிலுக்கு வந்து ரேவதி கழுத்தில் மாலையை போடுகிறான். மருது பிச்சைக்காரர்களுடன் உட்கார்ந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியான சாமுண்டீஸ்வரி அவனை அங்கிருந்து அழைத்து வருகிறாள்.

கீழ் தனமான வேலை: இங்கே கார்த்திக் ரேவதி கழுத்தில் மாலையிட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கோபப்பட கார்த்திக் சாமுண்டீஸ்வரி இடம் மாலையில் ஏதோ இருந்ததாக சொல்லி தாலியை கொடுக்கிறான். நீங்க இவ்வளவு கீழ்த்தரமா நடந்துப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கல என பதிலடி கொடுக்கின்றான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X