லவ் பண்றீங்களா? வெக்கத்தை விட்டு கேட்ட ரேவதி.. கார்த்திகை தீபம்!
சென்னை: மருது ரேவதி கழுத்தில் மாலை போடும் சமயத்தில் அது நடக்காமல் போக, மயில்வாகனம் மருதுவை தலையில் அடித்து மயக்கமடைய செய்கிறார். இந்த நேரத்தில் கார்த்திக் அங்கு வந்து ரேவதி கழுத்தில் மாலையை போட்டுவிடுகிறார். கார்த்திக் ரேவதி கழுத்தில் மாலையிட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாமுண்டீஸ்வரி கோபப்படுகிறார்.
அதைத் தொடர்ந்து சாமுண்டீஸ்வரியை சந்திக்கும் கார்த்திக், எதற்கு இந்த மாதிரி கேவலமான வேலைகளை செய்கிறீர்கள்? ரேவதி உங்கள் மகளாக இருந்தும், அவளுக்கு தெரியாமல் கல்யாணம் செய்து வைக்க நினைப்பது மிகப்பெரிய தவறு. மாலையில் நீங்கள் தாலியை ஒளித்து வைத்தது எனக்கு தெரியும். இருந்தாலும் நான் நேர்மையாக அந்த தாலியை எடுத்துவிட்டுத்தான் ரேவதியின் கழுத்தில் மாலையை போட்டேன். என்னைக்குமே ரேவதி என்னுடைய மனைவிதான். அவளுடைய விருப்பப்படி நிச்சயம் அவளுடைய கழுத்தில் நான் தாலி கட்டுவேன் என சவால் விட்டுவிட்டு செல்கிறான்.

கார்த்திகை தீபம்: மறுபக்கம், ரேவதிக்கு கார்த்திக் தன்னை காதலிக்கிறாரா என்ற சந்தேகம் வருகிறது. இந்த சந்தேகத்தை போக்கிக்கொள்வதற்காக ரேவதி, அங்கு ரவுடி போல் இருந்த ஒருவரிடம், "நீ என் மீது மோதுவது போல நடி. இதை பார்த்து கார்த்திக் கோபப்பட்டால், அவர் என்னை காதலிப்பதாக அர்த்தம்" என சொல்கிறாள். ரேவதி சொன்னது போலவே அந்த நபர் ரேவதியிடம் வம்பு இழுக்கிறார். ஆனால் கார்த்திக் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்ததால் ரேவதி கவலை அடைகிறாள்.
லவ் பண்றீங்களா: அதைத் தொடர்ந்து பேசிய கார்த்திக், "எதற்காக வேண்டுமென்றே ஆட்களை ஏற்பாடு செய்து இப்படி செய்கிறீர்கள்? உங்களுக்கு என்ன தெரிய வேண்டுமோ அதை நேரடியாக கேளுங்கள்" என சொல்ல, அப்போது ரேவதி வெட்கத்தை விட்டு, "நீங்கள் என்னை காதலிக்கிறீர்களா?" என கேட்கிறாள். உடனே கார்த்திக், "நீங்கள் என்னை காதலிக்கிறீர்களா?" என திருப்பி கேட்க, ரேவதியோ, "எனக்கு நிச்சயம் ஆகிவிட்டது. அப்படி இருக்கும்போது நான் எப்படி உங்களை காதலிக்க முடியும்?" என சொல்கிறாள். ஆனால் கார்த்திக், என்னுடைய முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன். அதேபோல் உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்கள்" என சொல்லி ரேவதியை குழப்பிவிட்டு அங்கிருந்து செல்கிறார். இதை அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications