அம்மன் கண்ணில் ரத்தம்.. கார்த்திக் செய்யப் போவது என்ன? - கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் சனிக்கிழமை எபிசோடில் ரேவதிக்கு கார்த்திக் தன்னை காதலிக்கிறாரா என்ற சந்தேகம் வருகிறது. இந்த சந்தேகத்தை போக்கிக்கொள்வதற்காக ரேவதி, ஒரு ரௌடியை போல் இருந்த ஒருவரிடம், "நீ என் மீது மோதுவது போல நடி. இதை பார்த்து கார்த்திக் கோபப்பட்டால், அவர் என்னை காதலிப்பதாக அர்த்தம் என சொல்கிறாள். ரேவதி சொன்னது போலவே அந்த நபர் ரேவதியிடம் வம்பு இழுக்கிறார். ஆனால் கார்த்திக் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்ததால் ரேவதி கவலை அடைகிறாள்.

அதைத் தொடர்ந்து பேசிய கார்த்திக், எதற்காக வேண்டுமென்றே ஆட்களை ஏற்பாடு செய்து இப்படி செய்கிறீர்கள்? உங்களுக்கு என்ன தெரிய வேண்டுமோ அதை நேரடியாக கேளுங்க என சொல்ல, அப்போது ரேவதி வெட்கத்தை விட்டு, நீங்க என்னை காதலிக்கிறீர்களா? என கேட்கிறாள். உடனே கார்த்திக், நீங்க என்னை காதலிக்கிறீர்களா? என திருப்பி கேட்க, ரேவதியோ,எனக்கு நிச்சயம் ஆகிவிட்டது. அப்படி இருக்கும்போது நான் எப்படி உங்களை காதலிக்க முடியும்? என சொல்கிறாள். ஆனால் கார்த்திக், என்னுடைய முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன். அதேபோல் உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்க என சொல்லி ரேவதியை குழப்பிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.

zee tamil Karthigai Deepam Serial
Photo Credit:

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரி இந்த கார்த்திக் இருக்கும் வரைக்கும் ரேவதிக்கும் மருதுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க முடியாது என வருத்தப்படுகிறாள். அப்போது சந்திரகலா, அக்கா அவனை கோவில் கும்பாபிஷேகம் விஷயத்தில் கோர்த்துவிட்டு விடலாம்,தொடர்ந்து அவனுக்கு பிரச்சனை கொடுத்துக்கொண்டே இருந்தால், அவன் ரேவதி பக்கம் வரமாட்டான் என சொல்கிறாள். இதையடுத்து, சிவணான்டி, சந்திரகலா மற்றும் முத்துவேல் ஆகியோர் கூட்டு சேர்ந்து கோவில் கும்பாபிஷேகத்தை எப்படி தடுத்து நிறுத்துவது என திட்டமிடுகின்றனர். அடுத்ததாக முத்துவேல் இரவு நேரத்தில் கோவிலுக்குள் நுழைந்து அம்மனின் கண்ணில் சிவப்பு மையை தடவி வைத்துவிட்டு வருகிறான்.

அம்மன் கண்ணில் ரத்தம்: அடுத்த நாள் காலையில் கோவிலில் பூசாமி வந்து பார்க்க அம்மன் கண்ணில் இருந்து ரத்தம் வழிவது போல மை வழிந்திருக்க அதை பார்த்து ஊர்காரர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மேலும், பல வருஷமான இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடக்கவே இல்லை. அதற்கு எல்லாம் காரணம் ராஜ சேதுபதியோட குடும்பம் தான் காரணம் என முத்துவேல் குற்றம் சாட்டுகிறார்.

ராஜ சேதுபதி என்ட்ரி: மற்றொரு பக்கத்தில் காசி நதியிலிருந்து ராஜா சேதுபதி திடீரென்று எழுந்து வருகிறார். அங்கிருந்த ஜோதிடர் ஒருவர் நீங்க ஊருக்கு கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஊருக்கு போய் கும்பாபிஷேகத்திற்கான வேலைகளை கவனிங்க என்று அனுப்பி வைக்கிறார். ஊருக்கு வரும் ராஜ சேதுபதி, இன்னும் 90 நாட்களில் இந்த கோவில் கும்பாபிஷேகம் நடக்கும் அப்படி நடக்கவில்லை என்றால், இந்த கோவில் முன்பே நான் செத்துவிடுவேன் என சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X