ராஜா சேதுபதி கொடுத்த வாக்கு.. கல்யாண பத்திரிக்கையோடு வந்த சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம்!
சென்னை: காசியில் இருந்த ராஜா சேதுபதியை அங்கிருந்த ஜோதிடர் ஒருவர் நீங்க ஊருக்கு கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஊருக்கு போய் கும்பாபிஷேகத்திற்கான வேலைகளை கவனிங்க என்று அனுப்பி வைக்கிறார். மற்றொரு கோவிலில் பூசாமி வந்து கோவிலை திறந்து பார்க்க அம்மன் கண்ணில் இருந்து ரத்தம் வழிவது போல மை வழிந்திருக்க அதை பார்த்து ஊர்காரர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மேலும், பல வருஷமான இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடக்கவே இல்லை. அதற்கு எல்லாம் காரணம் ராஜ சேதுபதியோட குடும்பம் தான். இந்த குடும்பத்தை ஊரைவிட்டே தள்ளி வைக்க வேண்டும் என சொல்கின்றனர்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில் யாரும் எதிர்பாராத விதமாக ராஜா சேதுபதி மாஸாக காரில் என்ட்ரி கொடுக்கிறார். ராஜா சேதுபதி வந்ததை பார்த்து ஊர் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது, ராஜா சேதுபதி கூடிய சீக்கிரம் கும்பாபிஷேகம் நடக்கும். என் பேரன் கார்த்தி தலைமையில் என் குடும்பத்தினர் இந்த கும்பாபிஷேகத்தை நடத்தி கொடுப்பான். இன்னும் 90 நாளில் இந்த கும்பாபிஷேகம் நடந்தே ஆகும். அப்படி நடக்கவில்லை என்றால் இந்த கோவில் முன் இறந்துவிடுவேன் என வாக்கு கொடுக்கிறார்.
ராஜா சேதுபதி சவால்: இதைக்கேட்டு பரமேஸ்வரி பாட்டி அதிர்ச்சி அடைந்து ராஜா சேதுபதியை சமாதானப்படுத்தி அழைத்து செல்கிறார். மறுபக்கம், கார்த்தியை தனியாக அழைத்துச் சென்று இன்னும் எவ்வளவு நாள் நான் உயிரோட இருப்பேன் என தெரியல, அதுக்குள்ள இந்த கும்பாபிஷேகம் நடக்கணும் என வருத்தப்படுகிறார். உடனே கார்த்திக் கவலைப்படாதீங்க பாட்டி நிச்சயம் கும்பாபிஷேகம் நடக்கும் என்கிறார்.
கல்யாண பத்திரிக்கை: மறுபக்கம் சாமுண்டீஸ்வரி வீட்டில் ராஜராஜ சேதுபதியின் வருகையை எதிர்க்காவே இல்லை என புலம்புகின்றனர். அதைத்தொடர்ந்து வீட்டுக்கு கல்யாண பத்திரிக்கை வர குலதெய்வ கோவிலில் வைத்து பூஜை செய்ய முடிவெடுக்கின்றனர். குலதெய்வம் கோவிலில் பூஜை செய்ய முதல் பத்திரிக்கையை ராஜா சேதுபதிக்கு கொடுக்க.. கொடுக்க வேண்டிய இடத்துல சரியா கொடுத்திருக்கீங்க என கார்த்திக் சொல்கிறான். மேலும் கல்யாண பத்திரிகையில் மாப்பிள்ளையின் பெயராக என்னுடைய பெயர்தான் இருக்கும் என சாமுண்டீஸ்வரிக்கு ஷாக் கொடுக்க அவள் மருதுவுடன் திட்டமிட்டபடி கல்யாணம் நடக்கும் சவால் விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications